• நோபேட் ஞாபகார்த்த போட்டிகள் 2018

  நோபேட் ஞாபகார்த்த போட்டிகள் 2018

  Published in Arrangementer

 • Tamilfilm

  Tamilfilm "Thana serndha kooddam" vises på Bergenkino

  Published in Arrangementer

 • மரண அறிவித்தல்

  மரண அறிவித்தல்

  Published in Arrangementer

 • அறிவித்தல் புனித பவுல் ஆலயம், பேர்கன்

  Published in Arrangementer

You are here: Home

நோபேட் ஞாபகார்த்த போட்டிகள் 2018

அமரர் நோபேட் செபஸ்தியாம்பிள்ளை ஞாபகார்த்த போட்டிகள் பேர்கனில் 4 வது வருடமாக நடைபெறவுள்ளது.

சிறுவர்களுக்கான உதைபந்தாட்ட போட்டிகள், பெரியவர்களுக்கான உதைபந்தாட்ட போட்டிகள், 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான உதைபந்தாட்ட போட்டிகள், மற்றும் கரப்பந்தாட்ட போட்டிகள், நடைபெறவுள்ளன.

இதில் பங்கு பற்ற விரும்பும் கழகங்கள் எம்மோடு தொடர்பு கொள்ளவும்.

சிறுவர்களுக்கான உதைபந்தாட்ட போட்டி வயது அடிப்படையில் : மதன்பாபு 95017936

பெரியவர்களுக்கான உதைபந்தாட்ட போட்டிகள்: ஸ்டீக் 40965473

40 வயதிற்கு மேற்பட்டவர்கள்: ஸ்டீக் 40965473

கரப்பந்தாட்டம் Overgame:  பேரின்பம் 46895464

கரப்பந்தாட்டம் Setup: ரொபேர்ட் 92487446

01.02.2018 முன்னதாக உங்கள்  கழகங்களை பதிவு செய்து கொள்ளவும்.

காலம்: 03.03.2018 சனி 
நேரம்: காலை 9.30 மணி 
இடம்:  Fyllingsdalen idrettshall, Bergen.

மரண அறிவித்தல்

திருமதி கிறிசில்டா சந்திரலோஷினி கபிரியேல்
(சந்திரா)
பிறப்பு : 21 சனவரி 1957 — இறப்பு : 12 சனவரி 2018 

யாழ்ப்பாணம் கூழாவடி ஆனைக்கோட்டையை பிறப்பிடமாகவும், நோர்வேயை வதிவிடமாகவும் கொண்ட, சந்திரா என்று அன்போடு அழைக்கப்படும் கிறிசில்டா சந்திரலோஷினி கபிரியேல் அவர்கள் வெள்ளிக்கிழமை 12.01.2018 அன்று நோர்வேயில் காலமானார்.

Read more: மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

யாழ். மானிப்பாய் நவாலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு முகத்துவாரம், யாழ். தெல்லிப்பழை வீமன்காமம், கொழும்பு வெள்ளவத்தை, நோர்வே Oslo, Bergen ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் வேலாயுதபிள்ளை அவர்கள் 09-01-2018  செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

Read more: மரண அறிவித்தல்

Tamilfilm "Thana serndha kooddam" vises på Bergenkino


Tamilfilm "Thana serndha kooddam" vises på Bergenkino
Dato: 16Tirsdag & 18 Torsdag, Januar 18
Tid: 18.00
Sted: Bergenkino MB5
Medvirkende: Surya, Keerthy Suresh, karthik, ramya Krishna, RJ balaji, Senthil
https://www.bergenkino.no/?articleId=1345588

மரண அறிவித்தல்

திருமதி. நேசம்மா குகதாசன் அவர்கள் இயற்கை எய்தினார்.

யாழ் குரும்ப சிட்டியை பிறப்பிடமாகவும், நோர்வே, பேர்கனை வசிப்பிடமாகவும் கொண்ட, திருமதி நேசம்மா குகதாசன் கடந்த செய்வாய்க்கிழமை (02.01.2018) மாலை இயற்கை எய்தினார். இவர் காலஞ்சென்ற நாகலிங்கம், செல்லம்மா ஆகியோரின் செல்லமகளும். காலஞ்சென்ற அருளம்பலம் குகதாசன் அவர்களின் (கொழும்பு ஸ்டூடியோ உரிமையாளர்) அன்புத் துணைவியாரும்ஆவார். 

இவர், சோபனா, கவிதா, கண்ணன் ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்ற பத்மநாதன், காலஞ்சென்ற ஞானி, காலஞ்சென்ற கதிர்காமநாதன், காலஞ்சென்ற குணம்  மற்றும் சிவம், நிர்மலா ஆகியோரின் அன்புச் சகோதரியும், Dr. தில்லையம்பலம் சிவகணேசன், சுஜிதாஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவர். இவர் மாளவி,சாரங்கன், சாமளி, வருணவி, சாய், சாயிரா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் புதன்கிழமை, 10.01.18 அன்று மதியம் 12.30 மணிக்கு, Møllendalsveien 56B, 5009 Bergen இலிலுள்ள Møllendals Store Kappell இல் நடைபெறும். 

தொடர்பு: கண்ணன்: 00 44 7950301300,  சிவகணேசன்:00 47 93086140

ஒளி விழா ஓர் பார்வை

ஒளி விழா ஓர் பார்வை

பேர்கன் தமிழ் சங்கத்தினால் கடந்த 16 டிசம்பர் 2017 சனிக்கிழமையன்று vannkanten கலாசார மண்டபத்தில் ஒளி விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 

தமிழ் சங்கத்தின் நீண்டகால நிர்வாக உறுப்பினராகிய விக்ரர் எதிர்வீரசிங்கம் அவர்கள் அரங்கில் தோன்றி திருமதி ரேவதி கண்ணன் அவர்களை அறிமுகம் செய்துவைத்து நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும்படி பணித்தார். திருமதி ரேவதி கண்ணன் அவர்கள் சிறப்பாக தொகுத்து வழங்கினார். 

பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த கத்தோலிக்க குருவானவர் Bjørn Tau மற்றும் மனுவேற்பிள்ளை, இயூஜின் செபஸ்ரியன், பூலோகநாதன் ஆகியோர் மங்கல விளக்கேற்றி மகிழ்வுடன் ஆரம்பித்து வைத்தனர். நாட்டில் மண்மீட்புப் போரில் உயிர்நீத்த போராளிகள் மக்கள், ஆழிப்பேரலையில் மரணித்தவர்கள் மற்றும் பேர்கனில் நம்மோடு வாழ்ந்து உயிர்நீத்த அனைவருக்கும்  அகவணக்கம் செலுத்தப்பட்டது. சங்கத்தின் ஆரம்பகால உறுப்பினரான பூலோகநாதன் அவர்கள் வரவேற்புரை வழங்கி மக்களை வரவேற்றார். அருட்தந்தை Bjørn Tau அவர்கள் சிற்றுரை வழங்கினார்.

Read more: ஒளி விழா ஓர் பார்வை
 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4  5  6  7  8  9 
 •  Next 
 •  End 

Page 1 of 9

Go to top