பேர்கன்,தமிழர் சங்கம் விடுக்கும் அறிவித்தல் 

என்றும் எமது அன்புக்குரிய,பேர்கன் வாழ் தமிழ் உறவுகளே,

மீண்டும் ஓர் செய்தி ஊடாக அனைவரையும் தொடர்பு கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம்.  இன்று  நாம் வாழும் நாட்டில் அமுல் படுத்தப்பட்டிருக்கும் «கொரோணா>>நோய்த்தடுப்பு சட்ட விதிகளுக்கு அமைய வருடா வருடம் BERGEN தமிழர் சங்கத்தால் ஒழுங்கு செய்து நடாத்தப்படும் "ஒளிவிழா" இவ் வருடம் நடைபெறமாட்டாது என்பதை மிகவும் கவலையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஒளி விழா அன்று உங்களால் வழங்கப்படும் அனைத்து அன்பளிப்புகளும்(நுளைவு கட்டணம்,விசேடமான நிதி அன்பளிப்புகள்,உணவு விற்பனவு)மூலம் பெறப்படும் அனைத்து நிதிகளும் எமது தாயக உறவுகளின் தேவைகளுக்கு உதவி வந்துள்ளோம். 

இம்முறையும் உதவித்தேவைகள் அதிகமாக இருப்பதால் உங்களின் பங்களிப்புகளை எதிர்பார்த்து நிற்க்கின்றோம். 2020 ஆண்டுக்கான அங்கத்தவர் பணத்தையும்(100குரோணர்)வழங்கி உதவுமாறும் தாழ்மையுடன் வேண்டிநிற்கின்றோம்.   Bank.konto.nr 36258283117. Vipps 93893538 நன்றியுடன், 

விக்ரர் எதிர்வீரசிங்கம்.  பேர்கன்,தமிழர் சங்கம்.நோர்வே.

மருத்துவர் Kathy  Ainul Møen உடனான நேர்காணல்

1. அரச அதிகாரிகள் மற்றும் தேசிய மட்டத்தினால் விடுக்கப்படும் பரிந்துரைகள், செயற்திட்டங்கள் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?
2. தற்போதுள்ள சூழ்நிலையில் மக்கள் எவ்வாறு இருக்க வேண்டும்?
3. வைத்திய சாலைகளின் நிலைமைகள் எவ்வாறு இருக்கின்றன?
இன்னும் பல முக்கிய விடயங்கள் பற்றி பேசுகிறார்

நேர்கண்டவர்: யூலியஸ் அன்ரனி

பேர்கன் ஏழுமலை சிறி ஆனந்த சித்தி விநாயகர் ஆலயகுருக்கள்

ஆனந்தராஜ சர்மா அவர்கள் வழங்கும் நவராத்திரி சிந்தனை.
தயாரிப்பு: நோர்வே தேன் தமிழோசை

 

வாசன் சிங்காரவேல் உடனான உரையாடல் 25.10.2020
பேர்கன் நகர சபையில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் விடுக்கப்பட்ட முக்கிய விடயங்கள்…
பேர்கென் நகர சபை பரிந்துரைக்கும் முக்கிய விடயங்கள்
தயாரிப்பு: தேன் தமிழ் ஓசை

பிரபாகரன்_ சட்டகம்  புத்தக அறிமுக விழா 

கொரோனா தொற்று தடுப்பு விதிமுறைகளுக்கு அமைய நிகழ்வுகள் நடைபெறும். 

குறிப்பிட்ட அளவு ஆசனங்களே இருப்பதால் உங்கள் வருகையை முன்கூட்டியே பதிவு செய்யவும் 
தொடர்புகளுக்கு :46545827 Jeyasingam

 நோர்வே விஜேந்திரன் எழுதிய 'மெளன அலைகள்' நில, புல உளவியற் பிரச்சனைகள் பற்றிய நூலின் வெளியீட்டு விழா.
 
ஈழத்தின் வவுனியாவில் இடம்பெற்ற நோர்வே விஜேந்திரன் எழுதிய 'மெளன அலைகள்' நில, புல உளவியற் பிரச்சனைகள் பற்றிய நூலின் வெளியீட்டு விழா.
போருக்குப் பின்னரான சூழலில் தமிழ்ச்சமூகத்தில் எண்ணிலடங்கா உளவியற் பிரச்சனைகளும், அதனூடான தீதான விளைவுகளும் தொடர்கின்றன.

நிலம் தொட்டு புகலிடம் வரையான உளவியற் பிரச்சனைகளை பேசும் நோர்வே விஜேந்திரன் எழுதிய 'மெளன அலைகள்' நூலின் வெளியீட்டு விழாவானது ஈழத்தின் வவுனியாவில் அமைந்துள்ள சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தில் 20.09.2020 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 03.00 மணிக்கு ஆரம்பமானது. நிகழ்விற்கு வவுனியா புளியங்குளம் ஆசிரியர் வாண்மை விருத்தி நிலைய முகாமையாளர் சு.ஜெயச்சந்திரன் தலைமை வகித்தார். வவுனியா பிரதேசத்தின் பிரதேச செயலர் க.கமலதாசன் பிரதம அதிதியாக பங்கேற்றார்.
 
விருந்தினர் வரவேற்பு, சுடர் ஏற்றுதல், அகவணக்கம் என்பன முறையே இடம்பெற்றன. ஆசியுரையினை ஈழத்தின் புகழ்பெற்ற சொற்பொழிவாளர் தமிழருவி த.சிவகுமாரன் வழங்கினார். வரவேற்புரையினை பெண் படைப்பாளி பிரபாகரன் வேதிகா வழங்கினார்.

தலைமையுரையினைத் தொடர்ந்து நூலின் வெளியீட்டுரையினை யோ.புரட்சி நிகழ்த்தினார்.
'மெளன அலைகள்' நூலினை நிகழ்வின் பிரதம அதிதியான வவுனியா பிரதேச செயலர் க.கமலதாசன் வெளியிட்டு வைக்க, முதற்பிரதியினை 'செந்தில்நாதன் நற்பணி மன்றம்' தலைவர் செந்தில்நாதன் மயூரன் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து நிகழ்வில் பங்கேற்றோர் நூற்பிரதி பெற்றுக்கொண்டனர்.

'மெளன அலைகள்' நூலின் விமர்சன உரையினை கலாபூசணம் 'தமிழ்மணி' மேழிக்குமரன் அவர்கள் நிகழ்த்தினார்.
பிரதம அதிதி உரையினைத் தொடர்ந்து நன்றியுரையினை நிகழ்வினை ஒழுங்கமைப்புச் செய்த ஜனனம் நம்பிக்கை மையத்தின் நிறுவுநர் கவிஞர் மாணிக்கம் ஜெகன் வழங்கினார்.
'மெளன அலைகள்' நூலின் ஆசிரியர் நோர்வே விஜேந்திரன் அவர்கள் 2015இல் 'பசுமை தேடும் பறவைகள்' கவிநூலினை வெளியீடு செய்தவர். ஈழத்தின் வவுனியா சேமமடுவினை பிறப்பிடமாகக் கொண்ட: நோர்வே விஜேந்திரன் அவர்கள் புலம்பெயர்ந்த பின் நோர்வே தேசத்தில் வசித்து, தற்போது பிரான்ஸ் தேசத்தில் வசித்து வருகின்றார்.
 

தியாகி திலீபன் நினைவு நாள்

குரல்வடிவம்: யூலியஸ் அன்ரனி
தயாரிப்பு: தேன் தமிழ் ஓசை

Helseråd om COVID-19 -Tamil

தமிழில் கொரோனா பற்றி பாப்பிலோனின் தகவல் இங்கே:

 

முகமூடிகளைப் பயன்படுத்துவது பற்றிய தகவல் இங்கே

 

https://www.fhi.no/tamil_informasjon-om-bruk-av-munnbind.pdf

https://www.fhi.no/tamil_korrekt-bruk-av-medisinsk-munnbind-plakat.pdf

https://www.fhi.no/vedlegg/tamil_korrekt-bruk-av-toymunnbind-plakat.pdf

மருத்துவர் Kathy Ainul M. Møen உடனான உரையாடல்

குரோனா தொற்றுநோய் இன்று பேர்கனில் மிகவும் கடுமையாக பரவி வருகிறது. இது பற்றிய கருத்து ….

இந்த தொற்று நோயை பரிசோதிக்கும் நிலையங்களை நிலைகள் எவ்வாறு உள்ளன.

தயாரிப்பு: தேன் தமிழ் ஓசை
 

செல்வி பியங்கா எல்மர் (Bianga Elmer) உடனான உரையாடல்  

 

கொரோனா தொற்றுநோய் இன்று பேர்கனில் மிகவும் கடுமையாக பரவி வருகிறது. இது உயர் கல்வி படிக்கும் மாணவர்கள் மத்தியில் எவ்வாறான தாக்கத்தை கொடுத்து உள்ளது .

இதுபேர்கெனில் அதிகம் பரவுவதுக்கு உயர் கல்வி மாணவர்களது கவனமின்மையும் காரணமாக இருக்கலாமா ?

Fadder uke என்றால் என்ன? அதன் முக்கியம் என்ன?

தயாரிப்பு: தேன் தமிழ் ஓசை

 

வாசன் சிங்காரவேல் உடனான உரையாடல்
பேர்கன் நகர சபையில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் விடுக்கப்பட்ட முக்கிய விடயங்கள்…

தயாரிப்பு: தேன் தமிழ் ஓசை

 

Kalender

Tamilunicode

Blodtrykk & Diabetes

Covid-19

Template by JoomlaShine