பங்களிப்புக்களை வழங்கிய அன்பு உள்ளங்களுக்கு எமது இதயம் நிறைந்த நன்றிகள்.

என்றும் எமது அன்புக்குரிய,பேர்கன் வாழ் தமிழ் உறவுகளே,

மீண்டும் ஓர் செய்தி ஊடாக அனைவரையும் தொடர்பு கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றோம். நாட்டில் அமுல் படுத்தப்பட்டிருக்கும் «கொரோணா»ஊரடங்கு உத்தரவினால் எமது மக்கள் பலர் (நாளாந்தம் உழைக்கும்)வருவாய் இன்றி பட்டினிச்சாவை எதிர்கொள்கின்றார்கள்.இவ்வாறான மக்களுக்கு இந் நேரத்தில் நாமும் எம்மால் இயன்ற நிதி உதவியை செய்ய எண்ணி கடந்த மாதம் நிதி சேகரிப்பதில் ஈடுபட்டிருந்தோம். இன்று வரை தங்கள் பங்களிப்புக்களை வழங்கிய அன்பு உள்ளங்களுக்கு எமது இதயம் நிறைந்த நன்றிகள்.

எமது செயல்திட்டத்திற்கு மதிப்பளித்த அனைவருக்கும் எமது நன்றிகள்.  முதற்கட்ட உதவியை "கரித்தாஸ்(Caritas)யாழ்ப்பாணம்,நிறுவனத்துக்கு அனுப்பிவைத்தோம்.அவர்கள் ஊடாக 81 குடும்பங்களுக்கு உதவி வழங்கப்பட்டுள்ளது.

உதவிகள் வழங்கப்பட்டமைக்கான ஆவணங்கள் தமிழர் சங்கத்துக்கு கிடைத்துள்ளன. நன்றிக்கடிதத்தை இத்துடன் இணைத்துள்ளோம்.

முக்கிய குறிப்பு, உதவிகள் வழங்கப்பட்ட போது எடுக்கப்பட்ட படங்கள் எம் இடம் உள்ளன,விரும்பியவர்கள் தொடர்பு கொண்டு பார்க்கலாம்.               

நன்றியுடன், 
விக்ரர் எதிர்வீரசிங்கம். 
பேர்கன்,தமிழர் சங்கம்.நோர்வே.