Valg 2019

 

அன்பான என் பேர்கன் வாழ் தமிழ் உறவுகளுக்கு!

உங்களில் பலர் அறிந்தது போல் இம்முறை நடக்கவிருக்கும் மாநகராட்சி தேர்தலிலும்  நான் வலதுசாரிக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடுகின்றேன். வேட்பாளர் எண் 16.


கடந்த இரண்டு காலப்பகுதிகளில் எனக்குக் கிடைத்த உங்கள் ஆதரவை தொடர்ந்தும் தருவீர்கள் என உங்களில் ஒருவனாய் நம்புகின்றேன். எம்மைச் சூழ்ந்து வாழும் சிறார்களின் சுபீட்சமான எதிர்காலத்திற்காகவும், அவர்களின் கல்வி மேம்பாட்டிற்காகவும்  எனது வேலையைத் தொடர உங்கள் உதவியை நாடுகின்றேன். 

தவிர, பல்லின மக்கள் வாழ்ந்து வரும் பேர்கன் மாநகரில் ஒவ்வொருவருடைய கருத்துக்கும் மதிப்பளித்து, இன நிற மத வேறுபாடின்றி எல்லோரும் இணைந்து ஒற்றுமையாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டிய தேவை அவசியம் என்பதை நன்கு அறிவேன். அதற்காக எனது கட்சிக்காரர்களுடன் சேர்ந்து முழு மனதுடன் செயற்படுவது எனது முக்கியமான பணிகளில்  ஒன்று. அத்துடன் பல்லின சமூகமும் அவற்றின் கலாச்சாரமும் பேர்கன் மாநகரத்திற்கு ஒரு முக்கியமான வளம் என்பதை மக்களுக்குப் புரிய வைப்பேன். 

நீங்கள் எனக்களிக்கும் விருப்பு வாக்குகளிலே என் வெற்றி தங்கியுள்ளது. 
நீங்கள் வலதுசாரிக் கட்சிக்கு வாக்களித்தால், பெயர்ப்பட்டியலில் எனது பெயரின் அருகில் (எண் 16) உள்ள பெட்டியில் புள்ளடியிட்டு உங்கள் விருப்பு வாக்கினை எனக்குத் தாருங்கள்.  இல்லை, நீங்கள் வேறு ஒரு கட்சிக்கு வாக்களிப்பீர்கள்  என்றால் அக்கட்சியின் வாக்குச்சீட்டின் பின்பகுதியில் எனது பெயரை (VASAN SINGARAVEL) எழுதி உங்கள் விருப்பு வாக்கினை எனக்கு வழங்கலாம். 

தேர்தல் நாள்: 09.09.2019
விரும்பின் முன்கூட்டியே நீங்கள் வாக்களிக்கலாம்: 12.08.2019 - 06.09.2019.
அடையாள அட்டை அவசியம். 


உங்கள் வாக்கை நாடும்,
உங்களில் ஒருவன், 
வாசன் சிங்காரவேல்.