மருத்துவ ஆலோசனையும் கலந்துரையாடலும்.

நமது இருதயத்தில் ஏற்படக்கூடிய அனைத்து நோய்கள் தொடர்பான மிகமுக்கிய ஆலோசனைகளையும், கலந்துரையாடலினையும் நடாத்தவிருக்கின்றார் மருத்துவர் கண்ணபிரான் அமிர்தலிங்கம் அவர்கள் (நீண்ட காலமாக பேர்கனில் மருத்துவப் பணியாற்றிவருபவர்).

இருதய நோய் என்றால் என்ன? இருதயத்தில் எவ்வாறான நோய்கள் ஏற்படுகின்றன? அதற்கான காரணிகள் எவை? அறிகுறிகள் என்ன? முதலுதவிகள் எவை? எவ்வாறான உணவு, உடற்பயிற்சி ….. இன்னும் பல விடயங்கள், உங்கள் சந்தேகங்கள் அனைத்துக்குமான ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளன.

 

இடம்: புனித பவுல் பாடசாலை
நாள்: 01.12.2019 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: 14.00 – 16.00

குறிப்பு: நம்மத்தியில் ஏராளமான மக்களினை பல்வேறு நோய்கள் தாக்கிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக இருதய நோய் பெரும்பாலானவர்களின் உயிரையும் பறிக்கின்றது. எனவே இவ்வாறான கலந்துரையாடலில் பங்குபற்றும்படி அன்போடு அழைத்து நிற்கின்றோம்.
ஒழுங்கமைப்பு
தமிழர் சங்கம் பேர்கன், கோர்டலாண்ட்