கொரோனா நடவடிக்கைகள் ஏப்ரல் 13வரை தொடரும்.

இடைவெளியைப் பேணுங்கள்: நீங்கள் வெளியே இருக்கும்போது, ஐந்து பேருக்குமேல் குழுவாகக் கூடாதீர்கள். ஒரு குடும்பத்தில் அல்லது ஒரே வீட்டில் இருப்பவர்களுக்கு வேறுதெரிவில்லை. உட்புறங்களில், மக்கள் ஒருவருக்கொருவர் குறைந்தபட்சம் இரண்டு மீட்டர் தொலைவில் இருக்க வேண்டும். ஆனால் இது குடும்பத்தில் அல்லது ஒரே வீட்டில் இருப்பவர்களுக்குப் (நடைமுறைக்குப்) பொருந்தாது.


முன்பள்ளி மற்றும் பள்ளிகளை மூடுதல்: தற்போதிருக்கும் பள்ளி விடுப்பு நடவடிக்கை தொடர்கிறது, ஆனால் பொருத்தமான மாற்றங்கள் பரிசீலிக்கப்படுகின்றன.


தொற்று பாதுகாப்பு தொடர்பான அதிகாரத்தின் உத்தரவுக்கு இணங்க முடியாவிட்டால் வணிகங்களை மூடுவது (பிசியோதெரபிஸ்டுகள், தசைச்சிகிச்சையாளர்கள், எலும்பு சிகிச்சையாளர்கள், மூக்குக்கண்ணாடி நிபுணர்கள், பேச்சு சிகிச்சையாளர்கள், உளவியலாளர்கள், பிற துணைச்சிகிச்சை முறைகள், சிறப்பு சுகாதார சேவைக்கு வெளியே உள்ள பிற நடவடிக்கைகள்): தற்போதுள்ள நடவடிக்கை தொடர்கிறது, ஆனாலும் சாத்தியமான இடங்களில் டிஜிட்டல் தகவல்தொடர்பு வழியாக அதை மேற்கொள்ளுதல் சாத்தியமாயின் குறிப்பிட்ட விதிவிலக்குகளின் கீழ் செயல்பட முனையவேண்டும்.

நிகழ்வுகள், உடற்பயிற்சிக்கூடம், நீச்சல் குளங்கள், சிகை அலங்காரக்கூடம், மற்றும் தோல் பராமரிப்பு போன்றவற்றை மூடுவது: தற்போதுள்ள கடையடைப்பு நடவடிக்கை தொடர்கிறது.

நோயாளிகளின் கவனிப்புடன் பணிபுரியும் சுகாதார வல்லுநர்கள், பணியாளர்கள் வெளிநாடுகளுக்குச்செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது. இப்பயணத்தடை நடவடிக்கை 2020 ஏப்ரல் 13வரை தொடரும்.

நோர்வேக்கு வருபவர்கள ; 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும். வீட்டுத்தனிமைப்படுத்துதல் நடவடிக்கை தொடரும்.

பாதிக்கப்பட்ட நபர்களுடன் நெருங்கிய தொடர்புகொண்ட நபர்கள் தொடர்புக்குப் பிறகு 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும்.  இத்தனிமைப் படும்துதல் நடவடிக்கை தொடரும், அதிகரித்த சோதனையுடன், தனிமைப்படுத்தப்-பட்டவர்களால் யார்யாரெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதற்கான சிறந்த அவதானிப்புகளை இந்நடவடிக்கை வழங்கும். 

நோய்த்தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் அல்லது பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் தனிமைப்படுத்துதல்: தனிமைப்படுத்தல்  நடவடிக்கை தொடரும்.

அனைத்து சுகாதார நிறுவனங்களும், நோயாளரைச்  சந்திக்க வருவோருக்கான ஒழுங்குமுறைகளை நடைமுறைப்படுத்தும் அத்தோடு வழக்கமான பார்வையாளருக்குரிய அனுமதிகள் நிறுத்தப்பட்டுள்ளன: நடவடிக்கை தொடரும்.

Dr. Elmer