யசோதாவுடன் சில நாட்கள் [நாள் 7]
எழுத்துருவாக்கம்: உஷா கனகரட்ணம்
குரல்வடிவம்: யூலியஸ் அன்ரனி
தயாரிப்பு: தேன் தமிழ் ஓசை

தமிழ் சங்கம் பேர்கன் நோர்வே

தாளையடியில் பிறந்து
அருட்பணிக்காய் அர்ப்பணித்து
அகமகிழ்ந்து நின்றவரே,
ஆன்மீகப் பணி புரிய நோர்வே பேர்கன் மண்
நாடி வந்த அருட்பணியாளரே,
பேர்கன் தமிழ் சங்கத்தின் தலைமை ஏற்று
எம் சங்கத்தின் சிறந்த பொறுப்பாளராய்
பல ஆண்டுகள் பணி புரிந்த
முன்னாள் தலைவரே,
தாய் மண்ணில் உறவிழந்து
பரிதவித்து நின்ற பாலகர்களை
அரவணைத்து கல்விப்பசி தீர்த்த பாசத்தந்தையே
ஆன்மீக, தத்துவ சிந்தனைகளை
முழங்கிய தங்கக்குரலோனே
இன்று நீங்கள் மௌனித்துக் கொண்ட
செய்தி கேட்டு தவித்து நிற்கின்றோம்

தமிழ் தாயின் பாசப் புதல்வனானே
இயேசு பிரானின் கருணை உள்ளமே
வானுலக தேவன் வாவென்று அழைத்தால்
எம்மால்தான் என்ன செய்ய முடியும்.
அழைத்த தேவன் தமதருகில் உமை அமர்த்தி
ஆறுதலைத் தந்தருள மனமுருகி மன்றாடி
இறைபரனை வேண்டுகின்றோம்.

பிரிவால் துயருறும்
பேர்கன் வாழ் மக்கள் சார்பில்
தமிழ் சங்கம் பேர்கன் நோர்வே

Hei, Jeg heter Esperanza og jeg er medlem i Inncovid, et prosjekt som ble startet av Universitet i Bergen for å utforske innvandrernes tilgang til informasjon om Covid-19. På nettsiden Inncovid.no kan man få informasjon på fem ulike språk (arabisk, polsk, somalisk, spansk og tamilsk) og svare på et spørreskjema som vil hjelpe til å forbedre norske helsetjenester i fremtiden. Kan du svare på spørreundersøkelsen, sende den til så mange tamilere du kan og be dem om å gjøre det samme? Spørreundersøkelsen kan bli funnet på nettsiden eller ved hjelp av lenken til den tamilske versjonen:

Tamilsk, Innvandrere i Norge under koronavirusepidemien (COVID-19)

யசோதாவுடன் சில நாட்கள் [நாள் 6]
எழுத்துருவாக்கம்: உஷா கனகரட்ணம்
குரல்வடிவம்: யூலியஸ் அன்ரனி
தயாரிப்பு: தேன் தமிழ் ஓசை

அருட்தந்தை இருதயநாதன் பேதுருப்பிள்ளை அவர்கள் இறைவனடி சேர்ந்து விட்டார்.


அருட்தந்தை இருதயநாதன் பேதுருப்பிள்ளை அவர்கள் 1947 மே மாதம் யாழ்ப்பாணம் தாளையடியில் பிறந்து, 27.12.1974 இல் யாழ் ஆயரினால் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். 1975, 1976 ஆம் ஆண்டுக்காலப்பகுதிகளில் யாழ் புனித மரியாள் பேராலயத்தில் பணிபுரிந்தார். அதேவேளை யாழ் சிறைச்சாலையிலும் குருவாகப் பணி புரிந்தார்.

1979இல் Sri-Lanka Palayaddu இல் உள்ள புனித லூர்து அன்னை ஆலயத்தில் பணி பரிந்தார். பின்னர் philiphins Manila இல் உள்ள கிழக்காசிய ஆயரில்லத்தில் இரண்டு ஆண்டுகள் கல்வியினைத் தொடர்ந்தார். அதே வேளை Metro Manila இன் காலூக்கன் நகரில் உள்ள Our Lady of Grace ஆலயத்தில் உதவிக்குருவாக பணிபுரிந்தார்.

01.04.1987 ஆம் திகதி அருட்தந்தை அவர்கள் Bergen நகருக்கு வருகை தந்து, புனித பவுல் பங்கில் தனது பணியினை ஆரம்பித்தார். அவர் நோர்வேஜிய மொழியை திறம்படக் கற்று இங்கு வாழ்ந்த அனைத்து மொழியினருக்கும் தனது பணியை ஆற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் சமயம் கடந்து அனைத்து தமிழர்களுடனும் நல்லுறவு கொண்டதுடன், அவர்களுடன் நட்பினை வளர்த்து தமிழர்களின் கலாசார விடயங்களிலும் தன்னை ஈடுபடுத்தினார். பல ஆண்டுகளாக Bergen தமிழ்ச் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்று சங்கத்தை வழி நடத்தினார்.

இங்கு வாழ்ந்து வந்த மூத்த தமிழர்களுடன் சிறந்த நட்புறவை கொண்டிருந்தார். புனித பவுல் பாடசாலையிலும் ஆசிரியராக பணியாற்றினார். 1994—1995 புனித பவுல் ஆலய பங்குத்தந்தையாகப் பணியாற்றினார்.

1995 —-1996 ஜெருசலேம், ரொறனரோ போன்ற இடங்களுக்கு மேற்படிப்பிற்காக சென்றிருந்தார். பின்னர் Oslo வருகை தந்து புனித Olav ஆலயத்தில் 2006 ஆம் ஆண்டு வரை பணி புரிந்தார்.

2001ல் Oslo இல் உள்ள புனித Synniva பாடசாலையிலும் ஆசிரியராக பணியாற்றினார். 2006 இல் Lillestrøm புனித Magnus பணியகத்தில் ஆயரின் மேய்ப்புப் பணிக்குழு உறுப்பினரானார். 2007 ஆம் ஆண்டில் Oslo கத்தோலிக்க மறை மாவட்டத்தில் பணியாற்றினார். அக்காலகட்டத்தில் அவர் நோர்வே மறை மாவட்ட குருவானார்.

பின்னர் புனித Magnus ஆலய பங்குத் தந்தையாக பணியாற்றி மீண்டும் தனது தாய் மண்ணாம் தாளையடிக்கு குடியேறினார். அங்கு அவரது உடல் நலக் குறைவு காரணமாக மீண்டும் நோர்வே நாடு திரும்பினார்.

அருட்தந்தை அவர்கள் 2020 மே மாதம் 30 ஆம் திகதி பூவுலகில் தன் பணி வாழ்வை முடித்து இறைவனடி சேர்ந்தார். அவரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.

தேன் தமிழ் ஓசை

அருட்தந்தை இருதயநாதன் பேதுருப்பிள்ளை அவர்கள் இறைவனடி சேர்ந்தார்.

அருட்தந்தை இருதயநாதன் பேதுருப்பிள்ளை அடிகளார் வயது - 73 பிறப்பு - 20-05-1947 இறப்பு - 30-05-2020

 யாழ்ப்பானம் தாளையடியை பிறப்பிடமாகவும், நோர்வேயை பணித்தளமாகவும் கொண்ட அருட்தந்தை இருதயநாதன் பேதுருப்பிள்ளை அடிகளார் 30-05-2020 சனிக்கிழமை அன்று Norway Fredrikstad இல் இறைபதமடைந்தார்.

அன்னார்,

யாழ்.புனித மரியன்னை பேராலயம், கண்டி அம்பிட்டியா தேவாலயம், திருகோணமலை பாலையூற்று புனித லூர்து அன்னை ஆலயம், மூதூர் புனித அந்தோனியார் ஆலயம் போன்ற கத்தோலிக்க பணித்தளங்களில் பணியாற்றி, பின்னர் தனது மறைப் பணிக்காக 1987 இல் Norway Bergen மண்ணில் கால் பதித்து 1988 ஆம் ஆண்டில் இருந்து Bergen புனித பவுல் தேவாலய ஆன்மீக குருவாகவும், 1994 முதல் அந்த தேவாலயத்தின் பங்குத்தந்தையாகவும், 1996 முதல் புனித Olav பேராலயத்தின் உதவிக் குருவாகவும், 2007 ஆம் ஆண்டில் இருந்து 2014ஆம் ஆண்டுவரை Lillestrom புனித மக்னஸ்(St.Magnus) ஆலய பங்குத்தந்தையாகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.

 அன்னாரின் ஆன்மா இறைவனின் பாதத்தில் அமைதியில் இளைப்பாற பிரார்த்திக்கின்றோம்.

 இவ் அறிவித்தலை குருக்கள், துறவிகள், அருட் சகோதரிகள், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 தகவல்: குடும்பத்தினர்

 

யசோதாவுடன் சில நாட்கள் [நாள் 5]
எழுத்துருவாக்கம்: உஷா கனகரட்ணம்
குரல்வடிவம்: யூலியஸ் அன்ரனி
தயாரிப்பு: தேன் தமிழ் ஓசை

யசோதாவுடன் சில நாட்கள் [நாள் 4]
எழுத்துருவாக்கம்: உஷா கனகரட்ணம்
குரல்வடிவம்: யூலியஸ் அன்ரனி
தயாரிப்பு: தேன் தமிழ் ஓசை

முள்ளிவாய்க்கால் நினைவு  சிறப்பு நிகழ்ச்சி

மே 18. தமிழினம் உள்ள வரை மறக்க முடியாத நாளது. இந்நிகழ்ச்சியில் முள்ளிவாய்க்கால் நினைவு பாடல்கள், கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன.

தயாரிப்பு: தேன் தமிழ் ஓசை

கிளிநொச்சி கரைச்சி பிரதேசசபை தவிசாளர் கௌரவ அருணாசலம் வேழமாலிகிதன் உடனான செவ்வி.

• முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற யுத்த கோரத்தின் அவலநிலை நினைவுப்பகிர்வு

• அக்கோர அழிவின் நிமித்தம் தாய்மண்ணிலும், புலம்பொயர் நாடுகளிலும் உள்ள தமிழ் மக்களுக்கு தரும் செய்தி என்ன? போன்ற முக்கிய விடயங்களை தாங்கி வருகிறது இந்நிகழ்ச்சி

தயாரிப்பு: தேன் தமிழ் ஓசை

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்.

இக்கட்டான கொரோணா சூழ்நிலை காரணமாக இவ்வருடம் எல்லோரும் எங்கள் வீடுகளில் இருந்தே ஒரு தீபம் ஏற்றி முள்ளிவாய்க்கால் பேரழிப்பை நினைவு கூருவோம்.
மே 18. திங்கட்கிழமை பி.ப 18 மணிக்கு ஒஸ்லோவில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள நினைவுகூரலில் நாமும் இணையத்தள வாயிலாக கலந்துகொள்ளலாம்.

இந்தநாள் ஈழத்தமிழினத்தின் இருப்பை அழிக்க நிகழ்த்தப்பட்ட இன அழிப்பின் குறியீட்டு நாளாகும்.
தற்போதைய நோய்த்தொற்றுக்காலத்தில், சூழ்நிலைக்கு அமைவாக இணையவழி ஊடாக (Zoom, Face book) இக்கூட்டு நினைவேந்தலில் ஒன்றிணைவோம் வாரீர்!!!
காலம்: 18.05.2020 மாலை 18:00 -20:00 மணி
முகநூல் முகவரி  https://www.facebook.com/tamilmurasam/
Zoom  இணைப்பு :- https://aho.zoom.us/j/63805072326
ஒழுங்குகள்: நோர்வே ஈழத்தமிழர் மக்களவை

Kalender

Tamilunicode

Blodtrykk & Diabetes

Covid-19

Template by JoomlaShine