29.03.2020 ஞாயிற்றுக்கிழமை பேர்கன் தேன் தமிழோசையில் தவழ்ந்த நிகழ்ச்சியினை இங்கு கேட்கலாம்.

 

சிறப்பு நிகழ்ச்சிகளை
ஈழத்திலிருந்து அருட்தந்தை A.M. ஸ் ரீபன் C.R அடிகளாரின் கிறிஸ்தவ நற்சிந்தனை,
கொரோணா வைரஸ் தொற்றுநோய் தொடர்பான தற்போதைய செய்திகளை மருத்துவர் Kathi Møen 
நோர்வேயினது இன்றைய பொருளாதார நிலை பற்றிய முக்கிய தகவல்களை உரையாடல் மூலம் தருகிறார் வாசன் சிங்காரவேலன் அவர்கள்,
கனடாவில் வசிக்கும் டானியல் ஜீவாவின் கவிதை அலங்கரிக்கின்றன…

25.03.2020 புதன்கிழமையன்று மாலை 17.00 - 18.00 மணிவரை தேன்தமிழோசையில் தவழ்ந்த ஒலிபரப்பினை இங்கு கேட்கலாம்.
சிறப்பு நிகழ்ச்சிகளாக

 

சந்திரமோகனுடனான உரையாடல்: கொரோணா வைரஸ் தொற்று நோய் பிரித்தானியாவின் இன்றைய நிலவரம்.
வைத்திய கலாநிதி லிமலநாதன் அவர்கள் வழங்கும் கொரோணா வைரஸ் தொற்று நோய் தொடர்பான ஓர் பார்வை

கொரோனா நடவடிக்கைகள் ஏப்ரல் 13வரை தொடரும்.

இடைவெளியைப் பேணுங்கள்: நீங்கள் வெளியே இருக்கும்போது, ஐந்து பேருக்குமேல் குழுவாகக் கூடாதீர்கள். ஒரு குடும்பத்தில் அல்லது ஒரே வீட்டில் இருப்பவர்களுக்கு வேறுதெரிவில்லை. உட்புறங்களில், மக்கள் ஒருவருக்கொருவர் குறைந்தபட்சம் இரண்டு மீட்டர் தொலைவில் இருக்க வேண்டும். ஆனால் இது குடும்பத்தில் அல்லது ஒரே வீட்டில் இருப்பவர்களுக்குப் (நடைமுறைக்குப்) பொருந்தாது.

மருத்துவர் Kathy Ainul Møen உடனான நேர்காணல்
கொரோணா வைரஸ் என்றால் என்ன?
எவ்வாறு தொற்றுகிறது?
இந்த நோய்க்கான அறிகுறிகள் என்ன?
தொற்றுவதைத்தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
தற்போதுள்ள சூழ்நிலையில் மக்கள் எவ்வாறு இருக்க வேண்டும்?
இன்னும் பல முக்கிய விடயங்கள் பற்றி பேசுகிறார்

நேர்கண்டவர்: யூலியஸ் அன்ரனி
தொழில்நுட்பம்: றொபேட் ஜோசப்
தயாரிப்பு: தேன் தமிழோசை

கோவிட் -19 சோதனை - யாருக்கு முன்னுரிமை?

காய்ச்சல், இருமல் அல்லது மூச்சுத்திணறல் ஆகியவற்றுடன் கடுமையான சுவாசத்தொற்று ஏற்பட்டால், பயணவரலாற்றைப் பொருட்படுத்தாமல், கோவிட்-19 இற்குறிய சோதனை செய்துகொள்ள வேண்டும்.
மேலும்: * கோவிட்-19 அறிகுறி உள்ளவர்களைச் சோதனைக்கு உட்படுத்தி தேவையேற்படின் நோயாளிகளை வைத்தியசாலையில் சேர்த்துக்கொள்ளவும் வேண்டும்.
* கோவிட்-19 நோயாளிகள் / சுகாதார நிறுவனங்களில் வசிப்பவர்கள்.
* கோவிட்-19 நோயாளி தொடர்பான வேலைகளுடன் சுகாதார சேவையிலுள்ள பணியாளர்கள். * 65 வயதிற்கு மேற்பட்ட நபர்கள், நாள்பட்ட நோயைக் கொண்டுள்ளவர்கள் . * கோவிட்-19 இன் உறுதிப்படுத்தப்பட்ட நபரோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள்.

தமிழ் சங்கம் பேர்கன் நோர்வே
Tamil Sangam Bergen Norway
Organisasjon nr : 996309126

பேர்கன் தமிழ் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் கொரோனா வைரஸ் பரவுதல் காரணமாக, எம்மக்களின் நலம் கருதி பிற்போடப்பட்டுள்ளது. புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும்.

Corona virus - Egenmelding 

Corona virus தனிமைப்படுத்தல் இல் இருப்பவர்கள் சுய அறிவிப்பை ( egenmelding ) எடுக்குமாறு அரசாங்கம் கேட்டுக் கொள்கிறது.
செய்தி | தேதி: 14.03.2020

வெளிநாட்டில் தங்கிய பின்னர் தனிமைப்படுத்தப்பட்ட ஒவ்வொருவரும் குடும்ப மருத்துவர் அல்லது அவசர அறைக்குச் செல்ல வேண்டியதில்லை என்பதற்காக சுய அறிக்கையைப் ( egen sykemelding)பயன்படுத்துமாறு முதலாளியிடம் கேட்க வேண்டும். "மருத்துவர்கள் நோயாளிகளுக்கு நேரத்தை செலவிட வேண்டும்," என்று சுகாதார வளைவு பராமரிப்பு அமைச்சர் கூறுகிறார்.

COVID-19 கொரோனா வைரஸ் - எதிர்கொள்ளுவது எப்படி?

 

சீனாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் சுவாசநோய், இப்போது சர்வதேச அளவில் 100 க்கும் மேற்பட்ட இடங்களில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸுக்கு “SARS-CoV-2” என்று பெயரிடப்பட்டுள்ளது, மேலும் அது ஏற்படுத்தும் நோய்க்கு “கொரோனா வைரஸ் நோய் 2019” (சுருக்கமாக “COVID-19”) என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஒரு தொற்றுநோய் என்பது உலகளாவிய நோயாகும். மக்களைப் பாதிக்க ஒரு புதிய வைரஸ் வெளிப்படும்போது தொற்றுநோய்கள் நிகழ்கின்றன. மேலும் அவை மக்களிடையே நிலையானதாக பரவக்கூடும். புதிய வைரஸுக்கு எதிராக முன்பே இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், இது உலகம் முழுவதும் பரவுகிறது.

கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் அதிகரித்து வரும் நிலையில்
பேர்கனிலும் பாதிக்க பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகின்றது.
இந்த கொரோனா வைரஸ் தொற்று நோய் சம்பந்தமாக உங்களுக்கு சந்தேகங்கள், உதவிகள், ஆலோசனைகள்  தேவைப்படின் எம்மோடு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு : Dr. எல்மர் 45859504
மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொண்டு உங்களின் சந்தேகங்களை கேட்டு அறிந்து கொள்ளலாம் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Bergen Vest CUP 2020

19. og 20. September
Barn - Overage - O40

 

விபுலானந்த அடிகளாரின் ஆவணப்படம் திரையிடல்.

எதிர்வரும் மார்ச் 08 ம் திகதி பொன்மொழி இளங்கோவனின் ஆக்கத்தில் உருவான விபுலானந்த அடிகளாரின் ஆவணப்படம் திரையிடப்படவுள்ளது.

அனைத்து தமிழ் மக்களும் பார்க்க வேண்டிய சிறந்த ஆவணப்படமாகும்.

இடம்: Vestkanten Kultursalen (Loddefjord)
நாள்: 08.03.2020 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: 15.௦௦ மணி

குறிப்பு: மதிய உணவு பரிமாறப்படும். நிகழ்வுக்கு வருபவர்கள் தயவுசெய்து 29.02.2020 சனிக்கிழமைக்கு முன்பாக எமக்கு அறியத்தரவும்.

தொடர்புகளுக்கு:
பா.ஜேயசிங்கம். கைத்தொலைபேசி: 465 45 827
ஜோ.மக்வீன். கைத்தொலைபேசி: 926 03 492

Kalender

No events

Tamilunicode

Blodtrykk & Diabetes

Covid-19

Template by JoomlaShine