You are here:

BergenTamil.com

En Hjemmside for tamilene i Bergen

Green Tea

E-post Skriv ut PDF


நுரையீரல் புற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கு பச்சைத் தேயிலை தேனீர் சிறந்தது என்று தாய்வானின் மருத்துவ பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 500 இற்கும் மேற்பட்டவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இருந்தே தெரிய வந்துள்ளது.

 

புகைப்பவர்களும் புகைபிடிக்காதவர்களுமாக நுரையீரல் புற்றுநோய்க்குள்ளானவர்களுக்கு தினமும் ஒரு குவளை பச்சைத் தேயிலை தேனீர் வழங்கப்பட்டுவந்தது. குறிப்பிட்ட காலத்தின் பின்னர் நோயின் தாக்கத்தை ஆய்வு செய்தபோது புகைப்பிடிப்பவர்களின் மீதான தாக்கத்தைவிட, ஏனையவர்களின் மீதான தாக்கம் குறைவான நிலையிலேயே காணப்பட்டுள்ளது.

 

புற்றுநோயின் கலங்கள் பெருகுவதை இவ்வகைத் தேனீர் கட்டுப்படுத்துகின்றது. இவ் ஆய்வின் ஊடாக புகைத்தல் உடல் நலத்திற்கு கேடு என்ற எச்சரிக்கையில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது. கமிலா சினெசிஸ் எனும் காய்ந்த இலையில் இருந்து பெறப்படும் தேனீரே இவ்வாறு கட்டுப்படுத்துகின்றது. ஆசியாவில் காணப்படும் இவ்வகைத் தேயிலையின் தேனீரை ஆசிய மக்களில் பெரும்பாலானோர் அருந்தி வருகின்றனர்.

ஒப்பீட்டளவில் நோக்கும் போது உலகிலேயே ஆசியாவில்தான் புற்றுநோயின் தாக்கம் குறைவாகக் காணப்படுகின்றது. அவர்கள் தமது உணவில் சின்னவெங்காயம், உள்ளி உட்பட பலவகை மூலிகைகளை சேர்ந்து உட்கொள்வதே இதற்கான முக்கிய காரணமாகும். சென்ற ஆண்டு யூலைமாதம் ஒக்ஸ்போர்டை தளமாக  கொண்ட கொஷ்ரன் ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் இவ்வகைத் தேனீர் மிதமான குடிபானம் என்றாலும் குறிப்பிட்ட சில புற்றுநோய்களைத் தடுக்கின்றது என்ற முடிவில் முழுமையாக உடன்பாடு இல்லை என்றும் கூறியுள்ளது.

tamilkathir.com

Sist oppdatert ( onsdag 17. februar 2010 12:26 )  

Legg til kommentar

Sikkerhetskode
Vis ny kode