- Informasjon
- Hits: 46
நோர்வேயில் தற்போதைய கொறோனா நிலை பற்றிய மருத்துவர்களின் அறிவுரை
- Informasjon
- Hits: 54
மீரா திருச்செல்வம் Edward prisen 2020
மீரா திருச்செல்வம் Edward prisen 2020 பெற்றுள்ளார். Radio Tamil /தேன் தமிழ் ஓசையின் இதயம் நிறை வாழ்த்துக்கள்.
- Informasjon
- Hits: 47
தேன் தமிழோசையின் மாவீரர் சிறப்பு நிகழ்ச்சி 27.11.20
Norway Radio Tamil
- Informasjon
- Hits: 50
தமிழீழத்தேசிய மாவீரர்நாள் 2020 பேர்கன் நேரடி ஒளிபரப்பு.
கார்த்திகை 27 மாலை 5.30 மணிக்கு நேரடி ஒளிபரப்பு ஆரம்பமாகும், தொடர்ந்து மாலை 6 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாகும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் நீங்கள் நேரடி ஒளிபரப்பை காணலாம்.
Facebook:
Bergentamil info : https://www.facebook.com/BergenTamil-Info-105096571434618
Youtube: https://youtu.be/DmbhyZ6-jp0
- Informasjon
- Hits: 54
மாவீரர் நாள் 2020
இனமானம் காக்க தம்முயிரை ஈகம் செய்த வீர மறவர்கள்!
ஈழக்கனவுடன் வீரச்சமராடிய வேங்கைகள்!
ஒரு கணம் எம் மனத்திருத்தி வணங்குவோம்.
உணர்வுகளால் உறுதி எடுத்துக்கொள்வோம்.
கொரோணா- உலகத்தொற்றில் இருந்து சமூகத்தைக் காக்க இந்நாட்டு அரசு மேற்கொள்ளும் தடுப்பு நடவடிக்கைகளை ஒத்துளைத்து, இவ்வருடம் மாவீரர் நாளை இணையத்தில் நினைவு கூருவோம்.
27 ஆம் நாள் மாலை 6 மணிக்கு இணைத்தில் நேரடியாக ஒளிபரப்பாகும் நிகழ்வுகளை பார்த்து வீட்டில் குடும்பமாக விளக்கேற்றி வணங்குவோம்.
நேரடி ஒளிபரப்புகளை Bergentamil இணையதளத்திலும், Bergentamil முகநூல் பக்கத்திலும் பார்வையிடலாம்
மாவீரர் நாள்
ஏற்பாட்டுக்குழு
- Informasjon
- Hits: 71
நத்தார் பாடல்கள்
வானொலி, இணையம் ஊடாக சிறுவர் இளையோரின் பாடல்கள்.
இவ்வருடம் நத்தார் விழாவினை கொண்டாடும் முகமாக நமது சிறுவர், இளையோரின் நத்தார் பாடல்கள் சிறந்த இசையோடு ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு செய்து Radio Tamil (தேன் தமிழ் ஓசை), Bergentamil.com இணையதளம், மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக ஒலி , ஒளிபரப்பு செய்ய தீர்மானித்துள்ளோம்.
இசையோடு பாடும் திறன் உள்ள சிறுவர்கள் , இளையோர் 30.11.2020ம் திகதிக்கு முன்பாக எம்மோடு தொடர்பு கொள்ளும்படி அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புக்கு: கைத் தொலைபேசி இலக்கம் யூலியஸ் 92 46 36 74, விக்டர் 93893538
ஒழுங்கமைப்பு Radio Tamil தேன் தமிழ் ஓசை
- Informasjon
- Hits: 88
பேர்கன்,தமிழர் சங்கம் விடுக்கும் அறிவித்தல்
என்றும் எமது அன்புக்குரிய,பேர்கன் வாழ் தமிழ் உறவுகளே,
மீண்டும் ஓர் செய்தி ஊடாக அனைவரையும் தொடர்பு கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம். இன்று நாம் வாழும் நாட்டில் அமுல் படுத்தப்பட்டிருக்கும் «கொரோணா>>நோய்த்தடுப்பு சட்ட விதிகளுக்கு அமைய வருடா வருடம் BERGEN தமிழர் சங்கத்தால் ஒழுங்கு செய்து நடாத்தப்படும் "ஒளிவிழா" இவ் வருடம் நடைபெறமாட்டாது என்பதை மிகவும் கவலையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஒளி விழா அன்று உங்களால் வழங்கப்படும் அனைத்து அன்பளிப்புகளும்(நுளைவு கட்டணம்,விசேடமான நிதி அன்பளிப்புகள்,உணவு விற்பனவு)மூலம் பெறப்படும் அனைத்து நிதிகளும் எமது தாயக உறவுகளின் தேவைகளுக்கு உதவி வந்துள்ளோம்.
இம்முறையும் உதவித்தேவைகள் அதிகமாக இருப்பதால் உங்களின் பங்களிப்புகளை எதிர்பார்த்து நிற்க்கின்றோம். 2020 ஆண்டுக்கான அங்கத்தவர் பணத்தையும்(100குரோணர்)வழங்கி உதவுமாறும் தாழ்மையுடன் வேண்டிநிற்கின்றோம். Bank.konto.nr 36258283117. Vipps 93893538 நன்றியுடன்,
விக்ரர் எதிர்வீரசிங்கம். பேர்கன்,தமிழர் சங்கம்.நோர்வே.