பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுலி தனது பாகுபலி படத்தின் மூலம் உலக சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தார். இந்த படத்தை தொடர்ந்து ஆர்ஆர்ஆர் என்ற படத்தை இயக்கியிருந்தார். ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன் மற்றும் பலர் நடிப்பில் இப்படம் வெளியானது.
சமீபத்தில் வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படங்களில் மூன்றாவது இடத்தை ஆர் ஆர் ஆர் படம் பெற்றிருந்தது. அதாவது கிட்டதட்ட 1100 கோடி உலகம் முழுவதும் இப்படம் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்போது மீண்டும் ஒரு 500 கோடி பட்ஜெட் படத்தை எடுக்க உள்ளதாக ராஜமவுலி அறிவித்துள்ளார்.