5.6 C
Norway
Saturday, April 19, 2025

அமெரிக்காவில் உள்ள இலினாய்ஸ் மாகாணத்தில் பச்சை நிறமாக ஜொலிக்கும் நதி

அமெரிக்காவில் உள்ள இலினாய்ஸ் மாகாணத்தில் வருடாந்திர பண்டிகையை முன்னிட்டு சிகாகோ நதியை பச்சை நிறமாக்கும் முயற்சிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அங்கு ஆண்டுதோறும் புனித பேட்ரிக் திருநாள் மார்ச் 17-03-2022 ஆம் திகதி கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த பண்டிகையின் போது மக்கள் அனைவரும் பச்சை நிற ஆடையணிந்து பங்கேற்பர். இதன் ஒரு பகுதியாக சிகாகோ நதியிலும் பச்சை நிற சாயம் கலக்கப்படும்.

1962-ம் ஆண்டு முதல் நதிக்கு சாயம் பூசுவது நடைபெற்று வருகிறது. கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பின் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த இந்த பண்டிகை கடந்த ஆண்டு முதல் மீண்டும் தொடங்கியது.

இந்த நிலையில் தற்போது புனித பேட்ரிக் திருநாளை முன்னிட்டு சிகாகோ நதியில் பெரிய படகுகள் மூலம் பச்சை நிறமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சாயம் குறைந்தது 7 நாள்கள் நதியை பச்சை நிறமாக வைத்திருக்கும் என்று கூறப்படுகிறது.

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்