அமெரிக்காவில் 2-ம் உலக போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சியில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்திருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
அமெரிக்காவின் டெக்ஸாஸில் இடம்பெற்ற விமான கண்காட்சியின் போது இரண்டு விமானங்கள் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
பெரிய ரக போயிங் பி-17 குண்டுகள் வீசும் விமானம் மற்றும் ஒரு சிறிய ரக பெல் பி-63 கிங்கோப்ரா என்ற விமானமும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த இரண்டு விமானங்களையும் செலுத்தியவர்களின் நிலை இதுவரையில் கண்டறியப்படவில்லை. அதிகாரிகள் உயிரிழப்புகளை உறுதிப்படுத்தவில்லை.
இருப்பினும், அறிக்கைகளின்படி குறைந்தது 6 பேர் விமானத்தில் இருந்தனர். அவர்கள் அனைவரும் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
அத்துடன் இரண்டாம் உலகப் போர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட விமானம் ஒன்று இதன் போது சேதமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் மீட்பு பணிகள் இடம்பெறுவதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.