-1.3 C
Norway
Sunday, November 24, 2024

ஆர்வக்கோளாறால் காருக்குள் சிக்கிக்கொண்ட கரடி!

கார் கதவைத் திறந்து உள்ளே சென்ற கரடிக்கு மீண்டும் கதவைத் திறந்து வெளியேறத் தெரியவில்லை. அந்தச் சம்பவம் அமெரிக்காவின் மோண்டனா மாநிலத்தில் நடந்தது.

இதனையடுத்து அந்தக் கரடி வேறுவழியின்றி இரவுப் பொழுதைக் காரிலேயே கழித்தது . இந்நிலையில் அது உணவுதேடிக் காருக்குள் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

காரின் உரிமையாளர்களான மைக் பிலாடியும் (Mike Pilati) அவரின் மனைவியும் காவல்துறை அதிகாரிகளைத் தொடர்புகொண்டனர். எனினும் வனவிலங்கு அதிகாரிகள் மறுநாள் தான் வருவர் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் காத்திருக்க விருப்பமில்லாததால் மறுநாள் காலை பிலாடி (Mike Pilati)கட்டடத்திலிருந்தவாறு ஒரு குச்சியைக் கொண்டு கார் கதவைத் திறந்தார்.

இதனையடுத்து காரிலிருந்து வெளியே வந்த கரடி அருகிலிருந்த தனது குட்டிகளை நோக்கி ஓடியது. கரடி சென்றதன் பின் காருக்கு ஏற்பட்ட சேதங்களைச் சோதித்தார் பிலாடி(Mike Pilati).

இதன்போது காரின் உடைந்த முன் கண்ணாடி, கடித்து வைக்கப்பட்ட முகப்புப்பெட்டி, சிதைந்துபோன கதவு, அத்துடன் கரடி நாற்றம் என்பனவே காருக்குள் எஞ்சி இருந்தது.

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்