-1.7 C
Norway
Sunday, November 24, 2024

கத்தாரில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள ஒட்டகங்கள் அழகு போட்டி!

கத்தாரில் ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டி விறுவிறுப்பாக இடம்பெற்று வருகிறது. இதற்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் பார்வையாளர்களாக உள்ளனர்.

இந்த நிலையில், ஒட்டகங்கள் பங்கேற்க கூடிய அழகு போட்டி ஒன்று அனைவரின் கவனம் ஈர்த்துள்ளது.

கத்தாரின் ஆஷ்-ஷஹானியா பகுதியில் ஜாயென் கிளப் சார்பில் நடக்கும் இந்த போட்டிக்காக வளைகுடா நாடுகள் முழுவதிலும் இருந்து ஒட்டகங்கள் கலந்து கொள்கின்றன.

இது தொடர்பில் கத்தார் ஒட்டகம் ஜாயென் கிளப் தலைவர் ஹமத் ஜாபர் அல்-ஆத்பா கூறும்போது,

உலக கோப்பை கால்பந்து போட்டி போன்று ஒட்டகங்களுக்கான உலக கோப்பை போட்டியையும் நாங்கள் நடத்தி வருகிறோம்.

வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலில் இருந்து போட்டிக்கான ஒட்டகங்கள் கலந்து கொள்ளும். அவற்றின் இனம் மற்றும் வயது அடிப்படையில் பல்வேறு பிரிவுகளாக அவை பிரிக்கப்படும்.

இவற்றில் கருப்பு ஒட்டகங்களை எடுத்து கொண்டால், உடல் அளவு மற்றும் தலை மற்றும் காதுகள் அமைந்த பகுதி கணக்கில் கொள்ளப்படும்.

ஆனால், மகாதீர் வகை ஒட்டகத்திற்கு காதுகள் கீழ் நோக்கி தொங்கி கொண்டிருக்க வேண்டும். நேராக நிற்க கூடாது. இதுபோக, அவற்றின் வாயும் வளைந்து இருக்க வேண்டும. ஆசெல் ஒட்டகங்களுக்கு என சிறப்பு பண்புகள் உள்ளன.

காதுகள் அமைந்த பகுதி மிக முக்கியம். எலும்புகள் மிக மென்மையாக இருக்க வேண்டும் என்று அவர் விவரிக்கிறார். இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பு, ஒட்டகங்களுக்கு மருத்துவ குழு ஒன்று எக்ஸ்ரே கொண்டு பரிசோதனை நடத்துகிறது.

ஒட்டகங்களுக்கு அறுவை சிகிச்சை செய்து அதன் அழகை மெருகேற்றி, மோசடி நடைபெறாமல் தடுக்க இந்த பரிசோதனை நடைபெறுகிறது.

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்