1.1 C
Norway
Saturday, November 23, 2024

சென்னை ஏரியாவில் அதிகம் வசூல் செய்த 5 படங்கள்

சென்னை ஏரியாவில் அதிகம் வசூல் செய்த டாப் 5 படங்களின் பட்டியல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் வருடத்திற்கு 100 தென்னிந்திய மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகின்றன. வெளியாகும் திரைப்படங்கள் அனைத்தும் வெற்றியை சந்தித்ததா என்பது கேள்விக்குறி தான். ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே மிக பிரம்மாண்டமான வசூலில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த கமலின் விக்ரம் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அனைத்து இடங்களிலும் நல்ல வசூல் வேட்டை நடத்தி வைக்கிறது. நல்ல கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் விக்ரம். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள்.

விக்ரம் படம்: இந்த படத்தைப் பொருத்தவரை ஒரு பழிவாங்கல் கதை என்றாலும் இயக்குனர் அதை சொல்லிய விதமும், படமாக்கிய விதமும் பாராட்டுகளை குவித்து இருக்கிறது. மேலும், அனைவரும் பாராட்டுகளை கமலின் விக்ரம் படம் நான்கு ஆண்டுகளுக்கு பின் வெளிவந்து இருப்பதால் ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடி வருகிறார்கள். இதுவரை விக்ரம் திரைப்படம் 400 கோடி வசூல் செய்து உள்ளது. வருகின்ற நாட்களிலும் வசூல் செய்யும் என்று கூறப்படுகிறது.

எந்திரன் 2.O: இயக்குனர் சங்கர் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படம் எந்திரன் 2.O. இந்த படத்தில் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் உட்பட பல அக்ஷய்குமார், நடித்திருக்கிறார்கள். இந்த படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. இந்த படம் சென்னையில் மட்டும் 24.65 கோடிகள் வசூல் செய்து இருக்கிறது.

பாகுபலி: இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளிவந்த படம் பாகுபலி. இந்த படத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் உட்பட பல ரம்யா நடித்து இருந்தார்கள். இந்த படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. இந்த படம் சென்னையில் மட்டும் 18.85 கோடிகள் வசூல் செய்து இருக்கிறது.

பேட்ட: இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 2019ஆம் ஆண்டு வெளிவந்த படம் பேட்ட. இந்த படத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சிம்ரன், திரிஷா, சசிகுமார் பாபி பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் சென்னையில் மட்டும் 15.68 கோடிகள் வசூல் செய்து இருக்கிறது.

தர்பார்: இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 2020ஆம் ஆண்டு வெளிவந்து இருந்த படம் தர்பார். இந்த படத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா உட்பட பல நடிகர்கள் நடித்து நயன்தாரா இந்த படம் சென்னையில் மட்டும் 15.18 கோடிகள் வசூல் செய்து இருக்கிறது.

விக்ரம்: லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகி இருந்த படம் விக்ரம். இந்த படம் தற்போது வரை சென்னையில் மட்டும் 15.08 கோடிகள் வசூல் செய்து இருக்கிறது. 15.08 வரும் காலங்களில் வசூல் ஆகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்படி முதல் ஐந்து இடத்தில் ரஜினி, பிரபாஸ், கமல் போன்றவர்களின் படங்கள் மட்டுமே ஆட்சி செய்து இருக்கின்றனர். ஆனால், தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலித்துக் கொண்டிருக்கும் அஜித், விஜய், சூர்யா போன்றோர்களின் படங்கள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்