8.3 C
Norway
Friday, October 18, 2024

பாம்பை கடித்து கொன்ற 2 வயது பெண் குழந்தை

மெஹ்மத் எர்கான் என்பவரின் இரண்டு வயதுள்ள பெண் குழந்தை வீட்டின் பின்புறம் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது திடீரென்று அக்குழந்தை அலறும் சத்தம் கேட்க, அண்டை வீட்டுக்காரர்கள் ஓடிச்சென்று பார்த்துள்ளனர். அப்போது அக்குழந்தை வாயில் ஒரு பாம்பைக் கடித்துக்கொண்டு நின்றுள்ளது.

இதைப் பார்த்த அவர்கள் பாம்பைக் குழந்தையின் வாயிலிருந்து பிடுங்கிப் போட்டிருக்கின்றனர். அப்பாம்பு அசையாமல் கிடந்திருக்கிறது. குழந்தை கடித்ததில் அப்பாம்பு உயிரிழந்துள்ளது. அதன் பின்பு அக்குழந்தையை மருத்துவமனைக்கு விரைந்து அழைத்துச் சென்றுள்ளனர்.

இது குறித்துப் பேசியுள்ள குழந்தையின் தந்தை மெஹ்மத் எர்கான் “சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் என் குழந்தை முதலில் பாம்பைக் கையில் வைத்து விளையாடிக்கொண்டிருந்ததாகவும், பாம்பு குழந்தையைக் கடிக்க அதிர்ச்சியில் அப்பாம்பைத் திரும்பக் கடித்து குழந்தை கொன்றதாகத் தெரிவித்தனர்.” எனத் தெரிவித்துள்ளார்

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குழந்தை 24 மணிநேரம் மருத்துவர்களின் கண்காணிப்பிற்குப் பிறகு நலமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கியில் உள்ள பாம்பு வகைகளில் வெறும் 12 மட்டுமே விஷத்தன்மை நிறைந்தது. குழந்தை நலமுடன் இருப்பதால் விஷமில்லாத பாம்பே குழந்தையைக் கடித்திருக்கவேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்