கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விக்ரம் இப்படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சியில் மையமாகக் கொண்டு உருவாகி உள்ளது. இப்படத்தில் ஹீரோயின், பாடல் காட்சிகள் எதுவும் இடம்பெறாமல் முழுக்க முழுக்க கதையை மையமாக வைத்தும் கதாபாத்திரங்களை மையமாக வைத்து உருவாகி உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அன்றைய காலத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படம் மிகப்பெரிய சாதனையை படைத்தது. அதாவது இதுவரை இல்லாத தொழில் நுட்பங்கள் மற்றும் வித்தியாசமான கிராபிக்ஸ் காட்சிகள் மேலும் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்ற பெயர் பெற்றது.
அதாவது முதன் முதலில் வெளியான தமிழ் ஜேம்ஸ் பாண்ட் திரைப்படம் எனக் கூறினர் அந்த அளவிற்கு அதிக பொருட்செலவில் மிக பிரம்மாண்டமாக ஆக்ஷன் காட்சிகள் நிறைந்து எடுக்கப்பட்டது.
ஆனால் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள விக்ரம் படம் கமல்ஹாசன் அப்போது நடித்த விக்ரம் படத்தை விட வித்தியாசமான கதையை வைத்து உருவாகியுள்ளதாகவும் அப்படத்தை இப்படத்தையும் ஒப்பிட முடியாது. அந்த அளவிற்கு கதையில் மாற்றங்கள் இருப்பதாகவும் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.