7.1 C
Norway
Monday, April 14, 2025

உயிரைக் காப்பாற்றிய மனிதரை விடாமல் துரத்தும் அணில்

நபர் ஒருவருடன் எங்கு சென்றாலும் பிரியாமல் பயணம் செய்யும் அணிலின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கோவை பாப்பன்நாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த ஹரி என்பவர் 8 மாதங்களுக்கு முன்பு அடிபட்ட நிலையில் தனது வீட்டிற்கு வந்த குட்டி அணில் ஒன்றினை காப்பாற்றி சிகிச்சை அளித்து சரி செய்துள்ளார்.

அதுமட்டுமின்றி தினமும் உணவளித்து வளர்ந்து வந்த அவரை தற்போது அணில் எங்கு சென்றாலும் பிரியாமல் அவருடனே பயணம் செய்கின்றது.

குறித்த அணிலுக்கு அப்பு என்று பெயர்சூட்டிய ஹரியை, அணில் ஒரு நிமிடம் கூட பிரியாமல் வீட்டிலும், வெளியிலும் உலா வருகின்றது.

இருசக்கர வாகனத்தில் ஹரியுடன் ஹாயாக பயணிக்கும் அணில், அவரது தோள், அணிந்திருக்கும் பை என சுற்றி வரும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்