ஏர்திங்ஸ் மாஸ்டர் எனப்படும் செஸ் தொடர் காணொலி காட்சி மூலம் நடைபெற்று வரும் நிலையில், உலகின் நம்பர் 1 செஸ் வீரர் கார்ல்சனை (carlsen), தமிழக வீரர் பிரக்ஞானந்தா தோற்கடித்த சிறுவனைக் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா மற்றும் உலகின் நம்.1 வீரரான கார்ல்சனும் மோதியதுடன், கருப்பு நிற காய்களை வைத்து விளையாடி 39 நகர்வுகளில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.
பிரக்ஞானந்தா(16) சென்னையில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். இவரது தந்தை போலியாவால் பாதிக்கப்பட்ட நிலையில், கூட்டுறவு வங்கியில் பணிபுரிந்து வருகின்றார்.
தந்தையின் உடல்நிலையால் பொருளாதார நெருக்கடியினை சந்தித்த போதிலும் குறித்த சிறுவன் தனது விளையாட்டை தொடர்ந்து கொண்டு இருந்துள்ளார்.
குறித்த சிறுவனின் சகோதரி வைஷாலியும் செஸ் போட்டியில் கலக்கி வருகின்றார். அவரை வீழ்த்த வேண்டும் என்று முதலில் விளையாட ஆரம்பித்த குறித்த சிறுவனின், தற்போதைய இலக்கு உலக செஸ் சாம்பியனாவது என்று உள்ளது.
வெறும் 7 வயதில் FIDE மாஸ்டர் பட்டமும், எட்டு வாயதுக்குட்ப்பட்டோருக்கான (2013) மற்றும் 10 வயதுக்குட்பட்டோருக்கான (2015) உலக இளம் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்று அசத்திய இவர் தொடர்ந்து 2016ல் உலகின் யங் இன்டெர்நேஷ்னல் மாஸ்டர் என்ற பட்டத்தையும் வென்றுள்ளார்.
பின்னர் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வெல்ல ஆர்வம் காட்டிய பிரக்ஞானந்தா அதற்கான தகுதி சுற்றுகளிலும் வெற்றி பெற்று, FIDE ரேட்டிங்கும் பெற்றார். அதன் மூலாம் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பன்னிரண்டு வயதில் வென்றார். உலகளவில் பதின் பருவம் எட்டுவதற்குள் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்ற 2வது வீரர் பிரக்ஞானந்தாவாகும்.
பிரக்ஞானந்தா மற்றும் அவரின் சகோதரியின் வெற்றிகளுக்கு முதுகெலும்பாக இருப்பது தாயார் நாகலட்சுமி ஆகும். தனது உடல்நிலை சரியில்லை என்று தெரிந்தபோதும், வெவ்வாறு நாடுகளுக்கு தனது குழந்தைகளை அழைத்துச் சென்று வருகிறார்.
அவர் கொடுக்கும் ஊக்கத்தால் பிரக்ஞானந்தா தொடர்ந்து வெற்றிகளை குவித்து வரும் நிலையில், இன்று உலகின் நம்பர் 1 வீரரான கார்ல்சனை வீழ்த்தியுள்ளார்.