கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் தனது 85ம் வயதில் பட்டம் பெற்று மூதாட்டியொருவர் அசத்தியுள்ளார்.
ஒன்றாரியோவின் மார்க்கம் பகுதியைச் சேர்ந்த இந்த மூதாட்டி அண்மையில் யோர்க் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்றுக்கொண்டார்.
ஹோர்டனிஸ் வெலாரி என்கிலின் (Hortense Valerie Anglin)என்ற மூதாட்டியே கலைத்துறையில் இளங்கலை பட்டத்தைபெற்றுக்கொண்டுள்ளார்.
இந்த பயணத்தின் ஒவ்வொரு பயணத்தையும் அனுபவித்து ரசித்த்தாகவும், இந்த தருணம் அர்த்தபூர்வமானதும், ஆனந்தமானதுமான தருணம் எனவும் அவர் பட்டம் பெற்றுக் கொண்டதன் பின்னர் கருத்து வெளியிட்டுள்ளார்.
குறித்த மூதாட்டி பட்டம் பெற்றுக் கொள்ள மேடைக்குச் சென்ற போது குழுமியிருந்த அனைவரும் எழுந்து நின்று தங்களது வாழ்த்துக்கைள கரகோசம் மூலம் வெளிப்படுத்தினர். ஜமய்க்காவை பிறப்பிடமாக கொண்ட இந்த மூதாட்டி தனது சகோதரி 79ம் வயதில் பட்டம் பெற்றுக் கொண்டதனை முன்னுதாரணமாகக் கொண்டு தானும் கல்வியில் ஆர்வம் காட்டியதாகத் தெரிவித்துள்ளார்.