தமிழ் சினிமாவில் தற்போது மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்று சூரியாவின் 41ஆவது படம். சூரரை போற்று, ஜெய் பீம் என வரிசையாக மாறுபட்ட படங்களில் நடித்து வரும் சூர்யா, தனக்கென தனி பாணியில் படங்கள் இயக்கி வரும் பாலாவுடன் அடுத்த படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
சமீபத்தில் படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் தொடங்கியுள்ளது. இந்த படத்தில் சூர்யா, வாய் பேச முடியாத, காது கேட்காத மீனவர் ரோலில் நடிப்பதாக கூறப்படுகிறது. மீனவ கிராமத்தை மையமாகக் கொண்ட கதையாக சூர்யா 41 படம் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. சூர்யா 41 படத்திற்காக கன்னியாகுமரியில் 3 வீடுகள் கட்டப்பட்டுள்ளதாம். இந்த வீடுகளில் தான் தற்போது ஷுட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. ஷுட்டிங் முடிந்ததும் இந்த வீடுகளை மீனவ கிராமங்களைச் சேர்ந்த ஏழைகளுக்கே கொடுத்து விட சூர்யா முடிவு செய்திருப்பதாக சமீபத்தில் கூறப்பட்டது. இன்னும் இரண்டு மாதங்களில் சூட்டிங் முடித்து படத்தை வருகிற அக்டோபர் மாதம் ஆயுத பூஜை விடுமுறை தினங்களில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
இருவரும் கிட்டத்தட்ட 18 வருடங்களுக்கு பிறகு இணைந்து பணிபுரியவுள்ள படம் இதுவாகும். சூர்யா 41 என்று தற்காலிகமாகத் தலைப்பிடப்பட்ட இப்படம் சூர்யாவின் 41வது வெளியீடாகும். மீனவ கிராம பின்னணி கொண்ட படமாக இது உருவாகவுள்ளது. இவர்கள் இருவரும் இதற்கு முன் நந்தா, பிதாமகன் போன்ற படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.
கடந்த அக்டோபரில் இதனை குறித்து அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்ட சூர்யா, இயக்குனர் பாலாவுடன் இணைய ஆவலுடன் காத்திருப்பதாக குறிப்பிட்டார். இந்த படத்திற்கு அனைவரின் வாழ்த்துகளும் தேவை என்றும் அவர் கூறினார் தனது ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.
அவர் என்னை விட என் மீது அதிக நம்பிக்கை கொண்டவர். அவர் என்னை புதிய பரிமாணங்களில் படங்களில் நடிக்க வைத்து அந்த உலகத்தை அனுபவிக்க வைத்தார். 20 ஆண்டுகளுக்குப் பிறகு, எனது தந்தையின் (சிவகுமார்) ஆசியுடன், அதே உற்சாகத்துடன் பாலாவுடன் இன்னொரு அழகான பயணத்தைத் தொடங்குகிறேன், என பதிவிட்டிருந்தார் சூர்யா.
தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவின் 2001 ஆம் ஆண்டு வெளியான நந்தா திரைப்படம் சூரரைப் போற்று நடிகரின் வாழ்க்கையில் ஒரு பெரிய இடைவெளி. அவர் படத்தில் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சூர்யா மீண்டும் இயக்குனர் பாலாவுடன் 2003 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான பிதாமகனில் இணைந்தார். இப்படத்தில் நடிகர்கள் விக்ரம், சங்கீதா மற்றும் லைலா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் சித்தனாக நடித்ததற்காக விக்ரம் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார்.