துணி துவைப்பதற்கு மட்டுமல்ல, மனிதர்களை துவைப்பதற்கும் வோஷிங் மிஷின் தயாராகி வருகிறது.
ஜப்பானில், வீட்டு உபயோக பொருட்களை தயாரிக்கும், ‘சயின்ஸ் கோ லிட்’ என்ற நிறுவனம் தான் இந்த புதுமையான முயற்சியில் இறங்கியுள்ளது.
துணி துவைக்கும் மிஷின் போன்ற வடிவத்திலேயே, ‘செமி ஸ்லீப்பர்’ போன்ற ஒரு படுக்கை அமைப்பு உள்ளது. அதற்குள் இறங்கி படுத்துக் கொள்ள வேண்டியது தான்.
அதற்கு முன்னதாக, தண்ணீர், சோப்பு, ஷாம்பு போன்றவற்றுக்கான நேரத்தை, ‘செட்’ செய்து விட வேண்டும். மிஷினை, ‘ஒன்’ செய்தால் போதும். சோப்பு போட்டு நம்மை நன்றாக குளிப்பாட்டி விடும்.
குளிக்கும்போது போரடிக்காமல் இருக்க, பாடல்களை கேட்கும் வசதி மற்றும் ‘மசாஜ்’ வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் குளித்து முடித்த பின், தலையை காய வைக்கவும் முடியும்.
இன்னும் சோதனை முயற்சியில் இருக்கும் இந்த மிஷினை, 2025ல் விற்பனை செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.