3.3 C
Norway
Saturday, November 23, 2024

15000 கிலோ தங்கத்தாலான உலகப் பிரசித்தி பெற்ற தங்க கோவில்!

தங்கத்தால் ஆன “தங்க கோவில்” என்றழைக்கப்படும் ஸ்ரீ லட்சுமி நாராயணி திருக்கோவில் வேலூர் மாவட்டத்தில், திருமலைக்கோடி என்னும் ஊரில் ஸ்ரீபுரம் என்ற பகுதியில் அமைந்திருக்கிறது.

சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு சுயம்புவாக ஸ்ரீ நாராயணி தேவியின் சிலை தோன்றியதாகவும், அப்போது அச்சிலையை சுற்றி ஒரு சிறு கோவில் எழுப்பப்பட்டு வழிபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

பின்னாளில் “15000 கிலோ தங்கத்தை” பயன்படுத்தி கடந்த 2007 ஆம் ஆண்டு இக்கோவில் கட்டி முடிக்கப்பட்டது.

கோவிலின் தெய்வமாக “நாராயணி தேவி” சுயம்புவாக காட்சியளிக்கிறார். இந்த கோவிலின் அனைத்து பகுதிகளுமே முழுக்க சுத்த தங்கத்தால் ஆன முலாம் மற்றும் தகடுகள் பொருத்தி செய்யப்பட்டதாகும்.

இந்த தங்க கோவிலின் வெளிப்பிரகாரம் வானிலிருந்து பார்க்கும் போது பெருமாளின் “சுதர்சன” சக்கரத்தில் இருக்கும் நட்சத்திர வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

சுமார் 2 கிலோமீட்டர் அளவு கொண்ட இந்த பிரகாரத்தை பக்தர்கள் சுற்றிவந்து இக்கோவிலின் மைய மண்டபத்தில் நுழையும் முறை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

கோயிலின் சிறப்பம்சம்
நட்சத்திர வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்த கோயில் முழுவதும் தங்க நிறத்தில் ஜொலிக்க காரணமாக திருப்பதி திருமலை தேவஸ்தானத்திலிருந்து வரவழைக்கப்பட்ட கொல்லர்கள் மூலம் கோயிலின் மைய கோபுரம் தங்கத்தால் செய்யப்பட்டுள்ளது.

15000 கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டது என்றும் 55000ம் சதுரடி பரப்பளவுக்கு தங்கக்கோயில் கட்டப்பட்டுள்ளது என்றும் சொல்லப்படுகிறது.

தங்கக் கோயிலை சுற்றி 10 அடி அகலத்திற்கு தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. கோயிலுக்குள் நுழைந்தவுடன் ஒரு தனி மண்டபமும், அதன் எதிரே செயற்கை நீர் ஊற்றுக்களும் உள்ளது.

மண்டபத்தின் பின்னால் மனிதனின் 18 வகையான குணங்களை தாண்டி இறைவனிடம் செல்வதை உணர்த்தும் வகையில் 18 நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்