-11.8 C
Norway
Wednesday, January 15, 2025

நோர்வேயின் தேசிய தின நாளன்று [17.mai ]உதவும் கரங்கள் நடாத்தும் உணவகம்

எமது அன்பான தமிழ் மக்களே,

உதவும் கரங்கள் அமைப்பானது கடந்த 29 ஆண்டுகளுக்கு மேலாக நோர்வேயின் தேசிய தின  நாளன்று பேர்கன் நகரின் மையப்பகுதியில் உணவகம் ஒன்றினை அமைத்து சுவையான பல்வகை உணவுகளை விற்று அதிலே கிடைக்கும் வருமானம் மூலம் நமது தாயகத்தில் அல்லலுறும் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றோம். இதனை நன்கு அறிந்து எமது மக்களாகிய தாங்கள் அவ்விடம் வந்து உணவினை வாங்குவதோடு தங்களால் இயன்ற அன்பளிப்புக்களையும் செய்து வருகின்றமைக்கு நமது தாயக உறவுகளின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்து நிற்கின்றோம்.

அதே போன்று இவ்வருடமும் சுவையான சிற்றுண்டிகள்  , மதிய உணவுகள் மற்றும் குடிபானங்கள்  என்பன விற்பனை செய்யப்படும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

Rolls, Vårruller, கடலை வடை, உளுந்து வடை, வாய்ப்பன், ரொட்டி கோழிக்கறி, ரொட்டி உருளைக்கிழங்குக்கறி/பருப்புக்கறி , சுண்டல். சமோசா, Pølse m/brød, brus, te, te m/melk, kaffe,

உங்களுக்கு தேவையான உணவு வகைகளை முன்கூட்டியே பதிவு செய்யலாம்
தொடர்புகளுக்கு: Julius 92463674, Micheal Babu 41552400, Nanthini 45410196

அனைவரையும் அன்போடு வரவேற்றுக் கொள்ளுகிறோம்

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்