12.6 C
Norway
Friday, April 18, 2025

18 மே தமிழின அழிப்பு நினைவுநாள்!

18 மே தமிழின அழிப்பு நினைவுநாள்!

அன்பார்ந்த பேர்கன் வாழ் தமிழ் உறவுகளுக்கு, அவசியமானதும் அவசரமானதுமான வேண்டுகோள்!!!

சிறிலங்காவில் இன்று ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலையில், போர்க் குற்றவாளிகளைச் சிங்கள மக்களே இனம்காணும் சூழ்நிலை உருவாக்கிக்கொண்டு இருக்கிறது.
இத்தருணத்தைப் பயன்படுத்தி, உலகிற்கு நாமும் எமது நியாயத்தை எடுத்துச்சொல்வோம்.

வழமை போன்று இல்லாமல், இம்முறை பல பேச்சாளர்களையும் அரசியல் பிரமுகர்களையும் அழைத்து, எமது நியாயங்களை உலகத்துக்கு உரக்கச் சொல்வோம். அனைவரும் வாருங்கள். எந்த அமைப்புக்களோ, குழுக்களோ இன்றி அனைத்து பேர்கன் வாழ் தமிழர்களாலும் ஒழுங்கு செய்யப்படும் இந்நிகழ்வில் குடும்பம் குடும்பமாக யாவரும் கலந்து கொள்வோம். ஒற்றுமையே உயர்வைத் தரும்.

குறிப்பு: நிகழ்வில் படம் பிடிப்பது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

இடம் :- Åsane Kulturhus
நேரம்:- மே 18 புதன்கிழமை பி.ப 6:00 மணி

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்