பிரான்ஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் உச்சியில் ஆண்டெனா (antenna) ஒன்று நிறுவப்பட்டுள்ளதால் அதன் உயரம் மேலும் 20 அடி அதிகரித்துள்ளது.
1889 ஆம் ஆண்டு பாரிஸில் கட்டப்பட்ட ஈபிள் கோபுரம், உலகளவில் அதிகம் பார்வையிடப்பட்ட சுற்றுலா தளங்களில் ஒன்றாக விளங்குகிறது.
1063 அடி உயர ஈபிள் கோபுரத்தில் பொருத்தப்பட்டுள்ள ஆண்டெனா-க்கள் மூலம் நூறாண்டுகளுக்கு மேலாக வானொலி ஒலிபரப்பு சேவைகள் அங்கு நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் தற்போது 20 அடி உயர டிஜிட்டல் ரேடியோ ஆண்டெனா ஒன்று ஹெலிகாப்டர் மூலம் ஈபிள் கோபுர உச்சியில் இறக்கப்பட்டு, பணியாளர்களால் பத்தே நிமிடத்தில் பொருத்தப்பட்டதாக பிரான்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.