பேர்கன் தமிழர் விளையாட்டுக் கழகத்தால் 21.04.05 திங்கள் அன்று நடாத்தப்பட்ட உதைபந்தாட்டப் போட்டி மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தன.
Atletico Bergen அணியினர் முதலாவது இடத்தையும், Bergen Vest Blue அணியினர் இரண்டாவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.
40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான போட்டியில் Bergen Vest அணியினர் முதலாவது இடத்தையும் Black Bush அணியினர் இரண்டாவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.
வெற்றி பெற்ற கழகங்களுக்கு வெற்றிக்கிண்ணமும், பணப்பரிசும் வழங்கப்பட்டன.
அனைவருக்கும் எமது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.