கடந்த பிப்ரவரி 22ம் திகதியை மிகவும் அரிதான மற்றும் அபூர்வமான தேதியாகும், ஏனெனில் இது ஒரு பாலிண்ட்ரோம் மட்டுமல்ல, ஒரு ஆம்பிகிராமும் கூட. அரிய தேதியை மக்கள் ‘இரண்டுகளின் நாள்’ என்று அழைக்கிறார்கள்.
22 பிப்ரவரி 2022 எண்ணில் 22/02/2022 இவ்வாறு எழுதி நீங்கள் அவதானித்தால், முன்னோக்கியும் பின்னோக்கியும் ஒரே மாதிரியாகப் படிக்கப்படுவதால் இது ஒரு பாலிண்ட்ரோம் ஆகும்.
அப்படியே தலைகீழாக இருப்பதால் அதுவும் அம்பிகிராம். இந்த தேதி மிகவும் அபூர்வமான ஒன்று என்பதை கடந்த சில தினங்களுக்கு முன்பு நாம் தெரிந்து கொண்டோம்.
இவ்வாறான அபூர்வமான நாளில் அமெரிக்காவில் குழந்தை ஒன்று பிறந்துள்ளது ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் North Carolina மாகாணத்தில் Burlington நகரில் Aberli மற்றும் Hank தம்பதியருக்கு குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
குறித்த குழந்தையானது அபூர்வ தேதியான 22.02.2022 இந்த தேதியில் பிறந்துள்ளது. இதில் ஆச்சரியம் என்னவெனில் அதிகாலை 2.22 மணிக்கு அறை எண் 2ல் பிறந்துள்ளது.
இவ்வாறு அபூர்வ தேதி, மற்றும் நேரம், அறை எண் இவை அனைத்தையும் இரண்டு என்ற எண்ணில் பிறந்திருக்கும் குறித்த குழந்தைக்கு பெண் குழந்தைக்கு Judah என்று பெற்றோர்கள் பெயர் சூட்டியுள்ளனர்.