பேர்கன் தமிழர் விளையாட்டுக் கழகத்தால் 22.02.25 சனியன்று அன்று நடாத்தப்பட்ட கரப்பந்தாட்டப் போட்டிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தன.
குறிப்பிட்ட நேரத்திற்கு சரியாக போட்டிகள் ஆரம்பமாகின. Setup/Over முறையில் போட்டிகள் நடைபெற்றன.
Setup முறையில் நடைபெற்ற இறுதியாட்டத்தில் Atletico Bergen – Bergen Vest Blue அணியினர் மோதிக்கொண்டனர். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் Atletico Bergen அணியினர் வெற்றி பெற்றனர்.
Over முறையில் நடைபெற்ற இறுதியாட்டத்தில் Newstars White – Newstars Black அணியினர் மோதிக்கொண்டனர். இதில் Newstars White அணியினர் வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற கழகங்களுக்கு பரிசில்களும், பணப்பரிசும் வழங்கப்பட்டன.
அனைவருக்கும் எமது வாழ்த்துக்களைத் தெரிவிகின்றோம்.

