9.5 C
Norway
Friday, April 18, 2025

62 வயதிலும் மலையேறி பார்வையாளர்களை அலறவிட்ட பாட்டி

எந்த வயதிலும் சாதிக்க முடியும் என்பது தான் பழமொழிக்கு கூறுவார்கள். ஆனால் நிஜத்தில் பல மனிதர்கள் வயது முதிர்ச்சியடைந்த பின்னும் சாதித்து இருக்கிறார்கள். வயது என்பது வெறும் எண் என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த வகையில் 62 வயது மூதாட்டி ஒருவர் தனது தைரியத்தால் மலையேறியது அனைவரயும் வாயடைக்க வைத்துள்ளது.

பெங்களூரை சேர்ந்த 62 வயதான நாகரத்தினம்மாள் என்ற பாட்டி சுமார் 1,868-மீட்டர் (6,129 அடி) உயரமான மலையில் கயிற்றை பிடித்து ஏறுகிறார்.

இவர், ஏறிய அந்த மலையானது அகஸ்தியர் கூடம் (Agastya koodam) சஹ்யாத்ரி மலைத்தொடர் ஆகும். மிக உயரமான மற்றும் கடினமான மலையேற்ற சிகரங்களில் ஒன்றாகும்.

திருமணத்திற்கு பிறகு 40 ஆண்டுகாலம் குடும்பத்தில் பிஸியாகிவிட்டதால், தற்போது தனது கனவுகளை நோக்கி பயணிக்க ஆரம்பித்துவிட்டார்.

தனது மகன் மற்றும் நண்பர்களுடன் இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்