-11.8 C
Norway
Wednesday, January 15, 2025

900 ஆண்டுகள் பழமையான மரப்பாலம் எரிந்து சாம்பல்

சீனாவின் கிழக்கே புஜியான் மாகாணத்தில் பிங்னன் கவுண்டி பகுதியில் சாங் வம்சம் ஆட்சி செய்த (960-1127) காலகட்டத்தில் மரத்தில் உருவான நீண்ட மரப்பாலம் ஒன்று எழுப்பப்பட்டுள்ளது.

98.3 மீட்டர்கள் நீளம் கொண்ட வனான் பாலம் என பெயரிடப்பட்ட இந்த பாலம் பிரபஞ்சத்தின் அமைதிக்கான பாலம் என்றும் அழைக்கப்படுகிறது.

வரலாற்று சிறப்புமிக்க இந்த மரப்பாலம் திடீரென்று தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது.

இதுபற்றி அறிந்ததும் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சி நடந்தது. 10 மணிநேர போராட்டத்திற்கு பின்பு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும், முதல் 20 நிமிடத்தில் தீயில் எரிந்ததில் மரப்பாலம் கீழே விழ தொடங்கியுள்ளது. நீண்ட வளைவுகளை கொண்ட இந்த பாலம் இயற்கை பேரிடரில் எரிந்திருக்காது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதுபற்றி “குளோபல் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த தீ விபத்து மனிதர்களின் தொடர்பினால் ஏற்பட்டிருக்க வேண்டும். நீரின் மேல் அமைந்த அந்த பாலம் தொடர்ச்சியாக தீப்பிடித்து எரிந்திருக்கிறது . அதனுடன் தனித்துவ மரஅமைப்பு, உள்ளிட்டவற்றை கவனிக்கும்போது, தீயால் சேதமடைந்திருக்கும் என்பதில் சந்தேகம் வலுக்கிறது” என தெரிவித்து உள்ளார்.
பொதுவாக கற்களால் பாலங்கள் அமைக்கப்படும். கலாசார மதிப்பு கொண்ட முக்கியத்துவம் வாய்ந்த, பழமையான, மரக்கட்டமைப்பில் உள்ளார்ந்த அறிவு மற்றும் புத்திச்சாலித்தனத்துடன், தொழில்நுட்ப அறிவுடன் வடிவமைத்து இருப்பதுடன், வளைவுகளுடன் கூடிய இந்த அளவு நீளத்துடன் மரப்பாலம் ஒன்றை அமைப்பது என்பது மிக கடினம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் “ஆற்றின் மீது அமைந்திருக்கும் கலை நுட்பம் வாய்ந்த மரத்தில் உருவான சீனர்களின் உள்ளார்ந்த அறிவை நிரூபிக்கும் வகையிலான கட்டமைப்பு ஒன்றை நாம் இழந்திருக்கிறோம்” என்று பெகிங் பல்கலை கழகத்தின் பழமையான கட்டமைப்பின் நிபுணர் சூ யிட்டாவோ [Su தெரிவித்து உள்ளார்.

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்