-0.7 C
Norway
Sunday, November 24, 2024

மீனின் நாக்கை தான் உண்டு புது நாக்காக மாறும் விசித்திர ஒட்டுண்ணி!

இங்கிலாந்து நாட்டின் சபோல்க் நகரில் இறக்குமதி செய்யப்பட்ட மீன்கள் அடங்கிய பெட்டியில் ஒரு மீனின் வாய் விசித்திரமுடன் காணப்பட்டு உள்ளது.

அதனை ஆய்வு செய்ததில் அந்த மீனின் வாயில் நாக்கு இருப்பதற்கு பதிலாக ஒட்டுண்ணி ஒன்று அமர்ந்திருந்தது தெரியவந்துள்ளது.

இதனை “சிமோதோவா எக்சிகுவா” அல்லது “நாக்கை உண்ணும் பேன்” என விஞ்ஞானிகளால் அழைக்கப்படும்.

இந்த ஒட்டுண்ணியானது “முதலில் மீனின் சுவாச பகுதி வழியே வாய் பகுதிக்குள் நுழைந்து உள்ளது. அதன்பின்னர் மீனின் நாக்கை மெல்ல உண்ண தொடங்கி உள்ளது. நாக்கில் உள்ள இரத்த குழாய்களை துண்டித்து உளளது. இதில், நாளடைவில் நாக்கு துண்டாகி விழுந்து விட்டது. மீதமுள்ள நாக்கு பகுதியில் தன்னை இணைத்து கொண்டு மீனின் புதிய நாக்கு போன்று உருமாறி உள்ளது”.

இதன்பின்பு, மீனின் கோழையை உண்ண ஆரம்பித்து உள்ளது. ஒட்டுண்ணி ஒன்று அது சார்ந்திருக்கும் உயிரினத்தின் உறுப்பு ஒன்றை காலி செய்து, அதற்கு மாற்றாக தன்னை நிலைநிறுத்தி கொள்வது என்பது இதுவரையில் தெரிந்த ஒரே ஒரு நிகழ்வு என விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் தெற்கு வளைகுடா பகுதியில் இந்த ஒட்டுண்ணி கண்டறியப்பட்டு உள்ளது.

ஒருவேளை இந்த ஒட்டுண்ணி மனிதர்களுக்குள் சென்றால் தீங்கு ஏதும் விளைவிக்காது என கூறப்படுகிறது.

எனினும், இங்கிலாந்தில் இறக்குமதி செய்யப்பட்ட அந்த மீன் பெட்டியை ஏற்க மறுத்து, நிராகரித்து விட்ட கடலோர துறைமுக சுகாதார கழகம், அதனை எந்த நாட்டில் இருந்து வந்ததோ அந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பி விட்டது என்று கூறப்படுகிறது.

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்