2.4 C
Norway
Saturday, November 23, 2024

27.03.24 அன்று நிர்த்திய அபிநயா கலைக்கூடத்தால் நடாத்தப்பட்ட “விழி மூடிய நீதி” நிகழ்வு

நிர்த்திய அபிநயா கலைக்கூடத்தால் நடாத்தப்பட்ட விழி மூடிய நீதி திருப்பாடுகளின் காட்சி நிகழ்வானது ஒரு உயிரோட்டமான நிகழ்வாக அமைந்ததையிட்டு மகிழ்கின்றேன்.
இதில் நடித்திருந்த கலைஞர்கள் அனைவரும் கிறிஸ்துவின் பாடுகள் வரலாற்றில் பங்கு கொண்ட மனிதர்களை அப்படியே உயிரோடு மேடையில் கொண்டு வந்தது போல தத்துரூபமாக தங்களின் நடிப்பையும்,அபிநயத்தையும் வெளிப்படுத்தி இருந்தார்கள்.

இக்காட்சியின் இடையிலே வந்த நடனங்கள், பாடல்கள், பின்னணி இசை கூர்ப்புக்கள், ஒலி, ஒளி அமைப்புகள், மேடை அலங்காரங்கள், கலைஞர் ஒப்பனைகள், பின் திரை அமைவுகள் எல்லாமே இயேசு வாழ்ந்த காலப்பகுதிக்கு உரித்தானதாகவும், உள்ளத்தையும், உணர்வுகளையும், மெய் சிலிர்க்க வைப்பதாகவும் அமைந்திருந்தன.

மிக சிறப்பான அம்சமாக, இந்து மக்களும், நோர்வே, வியட்னாம் வாழ் மக்களும் இப்பாத்திரங்களை ஏற்று அதற்கு உயிர் கொடுத்தாற்போல், மிக சிறப்பாக நடித்திருப்பது மிக மிக பாராட்டப்பட வேண்டிய ஒன்றாக குறிப்பிடுகிறேன்.

ஆகவே இதை நெறிப்படுத்திய திரு,திருமதி எல்மர், கிருஷாந்தி அவர்களை மிகவும் பாராட்டுகிறேன். உங்கள் இந்த கலைப்பணி சிறப்பாக தொடர இறை ஆசி கூறி நிற்கின்றேன்.
அகு.பணி. அருளப்பு ரஜனிகாந்

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்