கலந்துரையாடல் – மாவீரர் நினைவெழுச்சிநாள் கார்த்திகை 27 2024
அன்பார்ந்த தமிழ் உறவுகளே! வணக்கம்!
தமிழர்களின் இருப்புக்காகத் தமிழீழத் தேசியத் தலைவரின் வழிநின்று உறுதியோடு போரிட்டுத் தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய பல்லாயிரம் மாவீரர்களை நினைவுகூர்வதற்கு இன்னும் ஓரிரு மாதங்களே இருக்கின்றன.
பேர்கனில் வாழும் தமிழர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து மாவீரர் நினைவெழுச்சிநாளைச் சிறப்புற நடத்துவதற்கான ஒரு கலந்துரையாடலைச் செய்வதற்கு நாம் மிகவும் ஆவலாகவுள்ளோம்.
தாயகத்தின் அண்மைய நிகழ்வுகளும் நிலையும் மிகவும் கவலைக்குரியதாக இருக்கின்றன. ஒற்றுமையின்மை ஒரு இனத்தினது இருப்பையும் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கிவிட்டிருக்கிறது.
தனது வரலாற்றை அறிந்துகொள்வது ஒரு மனிதனின் இருப்பிற்கும் எதிர்காலத்திற்கும் மிக அவசியமாகும். எமது இளம் சமுதாயம் தமது வரலாறு தெரியாது வாழ்வது மிகவும் ஆபத்தானது. வரலாற்றைச் சரியான முறையில் கடத்துதல் என்பது பலர் கூடிச்செய்யவேண்டிய பணி.
எனவே தம்மினத்தின் எதிர்காலத்துக்காகத் தம்மை ஈந்த மாவீரர்களை நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து சிறப்பாக நினைவு கூர்ந்து, எமது அடுத்த சந்ததிக்கு வழிகாட்டுவோம்.
மாவீரர்நாள் 2024 தொடர்பான ஒரு கலந்துரையாடலுக்கு உங்கள் அனைவரையும் உரிமையுடன் அழைக்கின்றோம்.
இங்ஙனம்
மாவீரர்நாள் ஒருங்கிணைப்புக்குழு, பேர்கன்.
இடம்- Åsane kulturhus
காலம்- வெள்ளி (27.09.2024) பி.ப 6:00 மணி