கடந்து போன காலம்
(தாயகத்தில் சென்றவாரம் நடைபெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பு)
பேர்கன்தமிழ் இணையத்தளத்திற்காக வானவரம்பன் வந்தியத்தேவன்

இலங்கையின் மீன்வள ஆய்வில் நோர்வே
இலங்கை கடற்பரப்பில் மீன் வள ஆய்வுகளை மேற்கொள்வதற்கான இணைந்த வேலைத்திட்டம் ஒன்றை கடற்றொழில் அமைச்சு மற்றும் இலங்கைக்கான நோர்வே தூதரகம் ஆகியன இணைந்து ஆரம்பித்துள்ளன. மாளிகாவத்தையில் கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், இலங்கைக்கான நோர்வே தூதுவர் ரைன் ஜோன்லி ஸ்கெண்டல், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர, கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி. இந்து ரத்னாயக்க மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதன்போது உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில் துறையில் இலங்கையும் நோர்வேயும் நீண்டகால பரஸ்பர உறவுகளைக் கொண்டிருப்பதுடன் கடற்றொழிலாளர்கள் வாழ்வாதாரம் மற்றும் உள்நாட்டு பொருளாதாரம் ஆகியவற்றையும் உறுதி செய்வதிலும் கவனம் செலுத்துகின்றன. அதுமட்டுமல்லாது அதிகளவு கடல் வளங்களைக் கொண்ட தீவாக இலங்கை காணப்படுவதால் அந்த வளங்களை நிலைபேறான வகையில் பேணுவது அரசாங்கத்தின் குறிக்கோளாக உள்ளது என்றார். தூதரக செய்திக் குறிப்பைப் படிக்க: Embassy Press Release

இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையால் கடல் வளம் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளது என தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் ஏ.பெனடிற் குரூஸ் தெரிவித்துள்ளார். தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். எதிர்காலத்தில் எமது மீனவர்களின் வாμவாதாரம் பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளது. தலைமன்னார், பேசாலை, சிறுத்தோப்பு போன்ற மீனவ கிராமங்களில் இருந்து மீன் பிடிக்க கடலுக்குச் செல்லும் மீனவர்கள் பலர் இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று வரை விடுவிக்கப்படவும் இல்லை. விடுவிக்கப்பட்ட சில மீனவர்கள் நாட்டுக்குத் திரும்ப முடியாத நிலையிலும் உள்ளனர். தற்போது மன்னாரில் இருந்து தொழிலுக்குச் சென்ற மீனவர்களைக் கடலில் வைத்து கடற்படையினர் தாக்கித் துன்புறுத்திய சம்பவங்கள் உள்ளன. இதனால் அவர்களின் வாμவாதாரமும் பாதீக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மீனவர்கள் தொடர்பாகவும்,கைது செய்யப்பட்ட மீனவர்கள் தொடர்பாகவும் கடற்தொழில் அமைச்சர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் உள்ளமை வேதனையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, வடக்கு மீனவர்கள் தொடர்பாகவும் அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.


மீண்டும் உருவெடுக்கும் கல்முனை பிரதேச செயலகப் பிரச்சனை
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் வெளியிடப்பட்ட தரங்குறைப்பு அறிவித்தலினால் மீண்டும் இவ்விவகாரம் பூதாகரமாக உருவெடுத்துள்ளது. அரசாங்க சேவைகள் மாகாணசபை கள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு 9 ஜுலை 1993 வெளியிட்ட ஆவணத்தின்படி, அமைச்சரவை பத்திரம் 93/600/034(1) சமர்ப்பிக்கப்பட்டு அமைச்சரவையின் உடன்பாடு பெறப்பட்டதன் அடிப்படையில் 28 ஜுலை 1993 இல் கல்முனை வடக்கு உதவி அரசாங்க அதிபர் செயலகம் என அதுவரை அழைக்கப்பட்டுவந்த பணியகம் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் பணியகம் என மாற்றப்பட்டது. இப்பணியகம் தற்போது கல்முனை தெற்கு பிரதேச செயலாளர் பணியகத்தின் உப பணியகமாக தμமிறக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு விவகார அமைச்சு இம்மாதம் 8ம் திகதி அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருக்கு கடிதம் மூலம் ஒரு அறிவிப்பினைச் செய்துள்ளது. அதாவது கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் பணியகத்தினை கல்முனை தெற்கு பிரதேச செயலாளர் பணியகத்தின் உப பணியகமாக கருதுமாறு அக்கடித்தில் கேட்கப்பட்டுள்ளது. இன்னொரு வகையில் கூறுவதானால் இது கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் பணியகத்தை தரமிறக்கும் நடவடிக்கையாக அமைந்துள்ளது. அதாவது கல்முனை தமிழ் பிரதேச செயலகம் உப பிரதேச செயலகமாக செயற்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணக்காளர் ஒருவரை நியமிக்க நடவடிக்கையெடுத்து அதுவும் இழுபறியாகி கடந்த நல்லாட்சியில் அதுவும் சாத்தியமாகாமல் போனது. இந்த நிலையில் தற்போதைய புதிய அரசாங்கம் இத்தரங்குறைப்பு அறிவித்தலை அறிவித்துள்ளது. இதற்கிடையில் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களின் இடையீட்டைத் தொடர்ந்து கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தைத் தμமிறக்கும் செயற்பாட்டைஎதிர்வரும் 4ஆம் திகதி வரை இடைநிறுத்தி வைக்குமாறு அமைச்சர் சமல் ராஜபக்ச பணித்துள்ளார் என அறியக் கிடைக்கிறது. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்கான ஏற்பாடே இந்த அறிவித்தல் என்று வடக்கு பிரதேச செயலக தரங்குறைப்பு எனப் பிரதமரின் மட்டு அம்பாறை இணைப்பு செயலாளர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார். மேலும் குறித்த அறிவித்தல் தொடர்பில் யோசிக்க வேண்டாம். இது யாருக்கும் பாதிப்பான அறிவித்தல் இல்லை. வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்கான ஏற்பாடே இந்த அறிவித்தல். உபபிரதேச செயலகம் எனும் இடத்தில் இருந்தே பிரதேச செயலகத்திற்கான அறிவித்தலை வெளியிட முடியும். அதற்கான எற்பாடுகள் நடைபெறுகின்றன இதனடிப்படையிலேயே உப பிரதேச செயலகம் என பயன்படுத்துமாறு அறிவிக்கப்பட்டிருந்தது என அமைச்சர் சமல் ராஜபக்ச தன்னிடம் தெரிவித்தாக அவர் தெரிவித்தார்.


கார்தினல் அடித்த பல்டி
கடந்த ஞாயிற்றுக்கிழமை பொரளையில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வொன்றில் கருத்துவெளியிட்ட கர்தினால் மல்கம் ரஞ்சித் “ஈஸ்டர் தாக்குதல்களானது மதத் தீவிரவாதம் அன்றேல் மதம் மீதுள்ள அதீத பற்றினால் நடத்தப்பட்டதொன்றாக நாம் காணவில்லை. மாறாக குறித்த அரசியல் சக்திகள் தமது அதிகாரத்தை நிலையை வலுப்படுத்துவதற்காக மேற்கொண்ட முயற்சியாகவே கருதுகின்றோம்.” எனத் தெரிவித்தார். பார்க்க: https://www.youtube.com/watch?v=A13SJK0AXtA&t=26s
தற்போதைய அரசாங்கத்திலுள்ள தரப்பினருடன் தொடர்புடைய சக்திமிக்க அரசியல் சக்திகளே இந்தக்குண்டுத்தாக்குதல்களை திட்டமிட்டதாக எதிர்க்கட்சியிலுள்ள சில தரப்புக்கள் அவ்வப்போது கருத்துக்களை வெளிப்படுத்திவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மறுநாள் ஊடகங்களுக்கு கருத்துத்தெரிவித்த கர்தினால் 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தற்கொலைத்தாக்குதல்கள் அரசியல் ஆதாயம் தேடும் நோக்குடன் நடத்தப்பட்டவை என்ற அர்த்தப்பட தாம் கூறவில்லை என்றார். தமது அரசியல் அதிகாரத்தை வலுப்படுத்துவதற்கு தாக்குதல் மேற்கொண்டவர்களை பகடைக்காய்களாக பெயர் குறிப்பிடாத சில தரப்புக்கள் பயன்படுத்தியுள்ளதாக தம்மை மேற்கோள் காண்பித்து ஊடகங்களில் வெளியான செய்திகள் திரிபுபடுத்தப் பட்டதாகவும் தாம் சர்வதேச சக்திகளையும் வகாப்பிஸத்துடன் அவற்றிற்குள்ள தொடர்புகளையுமே குறிப்பிட்டதாகவும் கர்தினால் மேலும் தெரிவித்தார். “என்னுடைய கருத்துக்கள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளன. இந்த நாட்டில் இஸ்லாமிய தீவிரவாதமோ அதன் விரிவாக்கமோ இல்லை என்று நான் ஒருபோதிலுமே குறிப்பிடவில்லை. நான் எந்தவொரு அரசியல் சக்தியைப் பற்றியும் குறிப்பிடவில்லை. நான் வகாபிஸம் பற்றியும் அதனை எப்படி சில சக்திமிக்க நாடுகள் பயன்படுத்திவருகின்றன என்பது பற்றியுமே பேசினேன். நான் எந்த உள்நாட்டு அரசியல் சக்திகளைப் பற்றியோ தலைவர்களைப் பற்றியோ’ குறிப்பிடவில்லை” என கர்தினால் மேலும் தெளிவுபடுத்தினார்.


அரசாங்கத்துள் குழப்பம் - மே தினத்திற்கு தடை
மே தினத்தை முன்னிட்டு பொதுக்கூட்டங்களையும், பேரணிகளையும் நடத்தாமலிருக்க அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் இணக்கம் தெரிவித்துள்ளனர் என கொரோனா ஒழிப்புக்கான தேசிய செயல்பாட்டு மத்திய நிலையம் செவ்வாய்கிழமை அறிவித்துள்ளது. சிறிலங்கா சுதந்திரக்கட்சி இம்முறை தனித்து மே தினக் கூட்டத்தை நடத்தத் தீர்மானித்துள்ளது என அந்தக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன அதிரடியாக அறிவித்த சில மணிநேரங்களுக்குள் கொரோனா ஒழிப்புக் கான தேசிய செயல்பாட்டு மத்திய நிலையம் இவ்வறிவித்தலை வெளியிட்டது. இதனடிப்படையில் மே தினக்கூட்டம் தொடர்பிலான முன்கூட்டிய நடவடிக்கைகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இம்முடிவை மக்கள் விடுதலை முன்னணி எதிர்ப்பதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.தற்போதைய கொரோனா நிலைமை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக இருந்திருந்தால் இதற்கு முன்னர் இடைநிறுத்தப்பட வேண்டிய பல நிகழ்வுகள் இடம்பெற்றன எனவும் அவர் சுட்டிக் காட்டினார். இது சுகாதார காரணங்களால் எடுக்கப்பட்ட முடிவு என தெரிவிக்க முடியாது என குறிப்பிட்ட ரில்வின் சில்வா, ஏனெனில் பேரணி தொடங்குவதற்கான திட்டங்களை அரசாங்கம் ஏற்கனவே செய்திருந்தது என்றும் சுட்டிக்காட்டினார். பேரணிகளில் அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்கள் தெரிவிக்கப்படும் என்ற அச்சத்தில் அரசாங்கம் இதை அனுமதிக்கவில்லை என தாம் சந்தேகிப்பதாகவும் ரில்வின் சில்வா குற்றம் சாட்டினார்.

கடந்த திங்கட்கிழமை ஆளும் பொதுஜன முன்னணி கூட்டணியின் பங்காளிக் கட்சிகளிடையே ஏற்பட்ட குழப்பத்தைத் தணிக்கும் விதத்தில் நேற்று முற்பகல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூடிய விசேட கூட்டம் தோல்வியில் முடிவடைந்தது. பல்வேறு சிறிய கட்சிகளையும் சேர்ந்த பல பிரதிநிதிகளை இந்தக் கூட்டத்துக்கு பொதுஜன பெரமுன நிறுவுநர் பஸில் ராஜபக்ஷ கூட்டி வந்தமையால், பிரதான கூட்டத்தில் பங்குபற்றாமல் அமைச்சர்களான விமல் வீரவன்ஸ (தேசிய சுதந்திர முன்னணி), உதய கம்மன்பில (புதிய ஹெல உறுமய), வாசுதேவ நாணயக்கார (ஜனநாயக இடதுசாரி முன்னணி) போன்றோர் வெளியேறியமையால் தோல்வியில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது. “மக்களின் ஆணைக்கு மதிப்பளித்து அந்த ஆணையை மீறாமல் அரசாங்கம் செயல்பட வேண்டும். இதுதான் இந்த அரசை நிறுவிய மக்களின் விருப்பம். எனவே, மக்கள் ஆணையை மீறிச் செயற்பட்டால் இந்த அரசு கவிழ்வதை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது” என அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.


மாகாண சபைத் தேர்தல்கள்
மாகாண சபைத் தேர்தலை நடாத்துவது தொடர்பான இழுபறிகள் இன்னமும் தொடர்கின்றன. மாகாண சபை முறைமையை நீக்குவதற்கே அரசாங்கம் பெரிதும் விரும்பியது; விரும்புகின்றது. ஆனால், இந்தியாவின் அழுத்தம் காரணமாகவும் வேறுபல நடைமுறைச் சிக்கல்கள் காரணமாகவும் மாகாண சபை முறைமையை முற்றாக நீக்க இயலாமலுள்ளது. எனவே, புதிய அரசியலமைப்பைக் கொண்டுவந்து, அதில் சூட்சுமமாக ஏதாவது ஏற்பாட்டைக் கொண்டு வர ஆட்சியாளர்கள் விரும்புகிறார்கள். ஆனால் இப்போதிருக்கின்ற அரசியல் சூழலில், அரசியலமைப்பு மறுசீரமைப்பொன்றை சில மாதங்களுக்குள் கொண்டு வருவது கடினம். மறுபுறம் எந்த முறையில் நடத்துவது என்பது, அடுத்த பிரச்சினையாகவுள்ளது.

இதற்கிடையில், மாகாண சபை முறைமையை முற்றாக நீக்க வேண்டும் என்று அரசியல்வாதிகளும் பௌத்த பிக்குகளும் கடுமையான அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றனர். அத்துடன், “தேர்தலை நடத்த வேண்டாம்; தோல்வியைச் சந்திக்க விரும்பினால் நடத்துங்கள்” என்று இன்னுமொரு தேரர் கருத்துத் தெரிவித்திருக்கிறார். தேர்தலை நடத்த வேண்டாம் என்று கூறுவதற்குப் பின்னணியில், பிரதானமாக இரு காரணிகள் இருப்பதாக ஊகிக்கப்படுகின்றன. ஒன்று, வெற்றி பற்றிய நிச்சயமின்மை. இரண்டாவது, மீண்டும் மாகாண சபை முறைமையை உயிர்ப்பிப்பதானது, அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தில் இதுவரை நடைமுறைப்படுத்தாத விடயங்கள் (காணி, பொலிஸ் அதிகாரம்) பற்றிய அழுத்தங்கள் எழலாம்.

இந்தச் சிக்கலுக்குள் அரசாங்கம் மாட்டிக் கொண்டிருந்த நிலையில் கடந்தவாரம் இலங்கை விரைவில் மாகாண சபை தேர்தல்களை நடத்த வேண்டும் என இந்தியா எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளது. மாகாண சபைகளுக்கு தேர்தல்களை நடத்துவது உட்பட்ட நடவடிக்கைகள் மூலம் அதிகாரங்களை பகிர்வது குறித்த தனது அர்ப்பணிப்பை நிறைவேற்றவேண்டும் என்ற சர்வதேச சமூகத்தின் கோரிக்கையை இந்தியா ஆதரிக்கின்றது என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இது பற்றிய கட்டுரையொன்றை ஞாயிறு சிலோன் டுடே பத்திரிகை எழுதியிருக்கிறது: பார்க்க India-Ceylon Today


இணையத்தளக் கட்டுப்பாடுகள் அறிமுகம்
இணையத்தளங்களூடாக பகிரப்படும் பொய்யான, மக்களை திசைதிருப்பும் வகையிலான வதந்திகள் குறித்து தேவையான நடவடிக்கையை முன்னெடுக்கும் வகையில் சட்டத்தை தயாரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இணையத்தளங்களூடாக முன்னெடுக்கப்படும் பொய் பிரசாரங்களால் ஏற்படக்கூடிய பிரச்னைகளிலிருந்து சமூகத்தை பாதுகாக்க புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதனூடாக சரியான தகவல்களை மக்கள் பெற்றுக் கொள்ளும் நோக்குடன் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான சட்டமூலத்தை தயாரிப்பதற்கு, சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்க நீதி அமைச்சர் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் ஆகியோர் இணைந்து சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இணையத்தளங்களூடாக பொய்யான தகவல்களை பரப்புதல், மோசமான அச்சுறுத்தல்களை ஏற்படுத்துதல் மூலம் சமூகத்தை பிளவுபடுத்தல், வெறுப்புணர்வை பரப்புதல், ஜனநாயக நிறுவனங்களை பலவீனப்படுத்துதல் என்பன இடம்பெறுகின்ற என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக பல நாடுகள் சட்டங்களை வகுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன என்று அமைச்சரவை தீர்மானங்கள் தொடர்பான அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


பாராளுமன்றைக் கலங்கடித்த உரைகள்
ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடைய உளவுத்துறை அதிகாரி ஒருவரை ஷானி அபேசேகர கைது செய்து விசாரித்திருந்தபோதும் அவை தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் ஏன் சேர்க்கப்படவில்லை. உளவுத்துறை அதிகாரி மற்றும் ஈஸ்டர் தாக்குதல் நடத்தியவர்களுக்கு இடையிலான தொடர்புகளை ஐ.பி முகவரி மூலம் குற்றப்புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர கண்டுபிடித்தார் என ஹரின் பெர்னாண்டோ சுட்டிக்காட்டினார். பாராளுமன்றில் செவ்வாய்க்கிழமை உரையாற்றிய அவர், உளவுத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டு சி.ஐ.டி.யால் விசாரிக்கப்பட இருந்த நேரத்தில் அந்த அதிகாரியை அவர்களின் காவலுக்கு மாற்றுமாறு இராணுவ புலனாய்வுப் பிரிவு உத்தரவிட்டதாக கூறினார். ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழு நடத்திய விசாரணையில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டபோதும் அவை ஆணைக்குழுவின் அறிக்கையில் இணைக்கப்படவில்லை என ஹரின் பெர்னாண்டோ சுட்டிக்காட்டினார். மேலும் குறித்த தாக்குதலுடன் தொடர்பான விசாரணையில் ஈடுபட்ட சி.ஐ.டி. அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர் என்றும், அதே நேரத்தில் அபேசேகரவும் இடமாற்றம் செய்யப்பட்டு பின்னர் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டார் என்றும் அவர் தெரிவித்தார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக உரையாற்றும்போது பாராளுமன்றில் கடும் வாய்த்தர்க்கம் இடம்பெற்றதுடன் இதன்போது ஹரின் பெர்னாண்டோ, பாராளுமன்றையும் பொதுமக்களையும் தவறாக வழிநடத்த முயற்சிப்பதாக அரசாங்க தரப்பு உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர். இருப்பினும், தான் ஆதாரங்களுடனும் பேசுவதாக தெரிவித்த ஹரின் பெர்னாண்டோ, 2019 ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்த உண்மை விரைவில் மக்களுக்கு தெரியவரும் என குறிப்பிட்டார். முழுக்காணொளியைக் காண: https://www.youtube.com/watch?v=6CtDSncbxvU

கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற 2015 முதல் 2019 நவம்பர் மாதம் 19ஆம் திகதிவரையான காலத்தில் இடம்பெற்ற அரசியல் பழி வாங்கல் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜே.வி.பியின் தலைவர் முன்னைய மகிந்த ஆட்சியில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் தொடுக்கப்பட்ட வழக்குகளை எவ்வாறு ஒரு ஆணைக்குழு தள்ளுபடி செய்யலாம் என்று கேள்வி எழுப்பியதோடு தொடர்புடைய குற்றங்களையும் புட்டுப்புட்டு வைத்தார். அரசதரப்பு உறுப்பினர்கள் கூக்குரலிட்டு அவரது உரையைத் தடுக்க முனைந்தபோது “வியத்மக” என்ற பெயரில் பாராளுமன்றில் அமர்ந்திருப்போர் யார் என்பதை நக்கலாகச் சொல்லி பாராளுமன்றைக் கலங்கடித்தார். முழுக்காணொளியைக் காண: https://www.youtube.com/watch?v=o2hlAujhlb4

இலங்கை இராணுவத்தின் முதலாவது பீல்ட் மார்ஷல் என்ற பெருமையைப் பெற்றவரான பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா பாராளுமன்றத்தில் வியப்பைத்தரும் வகையில், இராணுவத்தினரால் வடக்கு - கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சில மோசமான கொலைச் சம்பவங்கள் குறித்த தகவல்களை துணிகரமான முறையில் வெளியிட்டிருந்தார். மிருசுவில் படுகொலையை செய்தவர்கள் இராணுவத்தினர்தான். இதில் தண்டனை வழங்கப்பட்டவருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியமை தவறு என்று, தனது பாராளுமன்ற உரையில் தெரிவித்திருக்கின்றார். கொலைகாரர்கள் கொலைகாரர்கள்தான். அவர்களை விடுவித்துவிட்டு, இராணுவ வீரர்களை விடுவித்துவிட்ட தாக கூறமுடியாதென்றும் பொன்சேகா தெரிவித்தார். காணொளி: https://www.youtube.com/watch?v=BhAzzBIuGkk


வவுனியாவில் மனிதச்சங்கிலி
வவுனியா ஸ்ரீநகர் கிராம மக்கள் தமது நியாயமான கோரிக்கைகளை தீர்க்குமாறு வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டத்தில் கடந்த திங்கட்கிழமை ஈடுபட்டனர். வவுனியா மாவட்ட செயலகத்துக்கு முன்பாக நேற்றுக் காலை இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த போராட்டக்காரர்கள், கடந்த 70 நாட்களாக நாம் எமது கோரிக்கைகளை முன்னிறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம். எனினும் எங்களது பிரச்னைகளை தீர்ப்பதற்கு அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ முன்வரவுமில்லை-ஆர்வம் காட்டவு மில்லை. ஸ்ரீ நகர் கிராமம் உருவாகி இந்த வருடத்துடன் 26 வருட காலம் கடந்தும் எமது மக்களுக்கு அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளான காணிகளுக்கு உறுதிப்பத்திரம் வழங்கல், வீடு அற்றவர்களுக்கு வீட்டுத்திட்ட உதவி, சீரற்ற வீடுகளை திருத்தம் செய்ய நிதி உதவி, பொது நோக்கு மண்டபம், முன்பள்ளி கட்டமைப்பு போன்ற பல்வேறு தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை. இந்த கோரிக்கைகளை முன்வைத்துகடந்த 70 நாட்களாக எமது கிராமத்தில் நாம் போராடி வருகின்றோம். இதனை நிறைவேற்றித்தருவதாக பிரதேச செயலாளர் எழுத்து மூலம் உறுதிமொழி வழங்கியதுடன், எமக்கு 14 நாட்களுக்குள் இந்த கோரிக்கைகளில் முதற்கட்டமாக அலைகரைப்பகுதி காணிப் பிரச்சனை மற்றும் விளையாட்டு மைதானப் பிரச்சனைகளை முடித்துத் தருவதாகக் கூறினார். எனினும் இன்று 70 நாட்கள் ஆகியும் எமது கோரிக்கைகளுக்கு பதில் கிடைக்காத பட்சத்திலேயே இந்த மனிதச் சங்கிலிப் போராட்டத்தை மாவட்ட செயலகத்திற்கு முன்பாக முன்னெடுத்துள்ளோம் என்றனர். படங்களை பார்க்க: Vavuniya-1,2,3,4,5,6,7


ஈஸ்டர் தாக்குதலின் இரண்டாவது ஆண்டு நிறைவு
குடந்த புதன்கிழமை ஈஸ்டர் தாக்குதலின் இரண்டாவது ஆண்டு நிறைவு நாடெங்கும் நினைவுகூரப்பட்டது. 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான உண்மையை அரசாங்கமும் சம்பந்தப்பட்ட துறையினரும் வெளிப்படுத்த தவறிவிட்டதாகக்; கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை குற்றம் சாட்டியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதல்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து, குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்தவேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளது. எனினும், சிறுபான்மை இனத்தவர்களை இலக்கு வைத்து நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு மிகவும் மோசமான பயங்கரவாதத் தடைச்சட்டம் பயன்படுத்தப்படக்கூடாது என்று இலங்கை அரசாங்கத்துக்கு சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.

ஏப்ரல் மாதம் 13ம் திகதி அரசாங்கம் 11 இஸ்லாமிய அமைப்புகளை தடைசெய்வதாக தெரிவித்து, வர்த்தமானி அறிவித்தல் ஒன்றினை வெளியிட்டது. நாட்டின் சமாதானத்தைத் தொடர்வதை உறுதிப்படுத்தும் பொருட்டு நன்நோக்குடனும் தேசிய பாதுகாப்பு, பொதுமக்கள் ஒழுங்கு மற்றும் சட்டவாட்சி என்பவற்றின் நலனிலும் மேற்கொள்ளப்பட்ட இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளை முன்னெடுப்பதில், மேற்படி அமைப்புகள் தடைசெய்யப்படுவதாக அந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. பார்க்க: English, தமிழ்
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இவ்வமைப்புகளின் தடையை நீக்குவதற்கு முயற்சிகள் நடப்பதாக திவயின பத்திரிகை குற்றஞ் சாட்டியிருந்தது. பார்க்க: Divayina

இந்தப் பின்னணியில் முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் மற்றும் அவரின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் சனிக்கிழமை (24) அதிகாலையில் கைது செய்யப்பட்டனர். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடைய விசாரணைகளை முன்னெடுப்பதற்காக முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. பார்க்க: Rishard Tweet


நோர்வே முதலிடம், இலங்கை 127, சிங்கப்பூர் 160
2021ம் ஆண்டிற்கான உலக ஊடக சுதந்திர குறிகாட்டியில் இடம்பெற்றுள்ள 180 நாடுகளில் 127வது இடத்தில் இலங்கை தரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவோ மேலும் கீழே 142வது இடத்திலேயே தரப்படுத்தப்பட்டுள்ளது.இலங்கை கடந்தாண்டிலும் 127வது இடத்திலேயே தரப்படுத்தப்பட்டிருந்தது. பொருளாதாரத்தில் முன்னேறிய நாடான சிங்கப்பூரின் ஊடக சுதந்திர நிலை மேலும் மோசமடைந்து கடந்தாண்டைவிடவும் இரண்டு இடங்கள் கீழே சென்று அந்தாடு 160 இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் ஊடக சுதந்திரம் மிக மோசமானது என்ற பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. இக்குறிகாட்டியில் நோர்வே முதல் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பார்க்க: https://rsf.org/en/ranking_table


செயற்படாத பாராளுமன்ற உறுப்பினர்களில் தமிழ் பிரதிநிதிகள்
தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களில், பாராளுமன்றத்தில் மிகக் குறைவான செயல் திறனை வெளிப்படுத்தும் பத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பாராளுமன்றத்தின் செயற்பாடுகளை ஆராயும் இணையமான ஆயவொசi.டம நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது பொதுஜன பெரமுனவை சேர்ந்த ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சக்தியின் 2 பாராளுமன்ற உறுப்பினர்களும், இலங்கை தமிழ் அரசு கட்சி, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆகியவற்றின் தலா ஒவ்வொரு எம்.பிக்களும் “பாராளுமன்றத்தில் செயல்படாத” உறுப்பினர்களாக பட்டியலிடப்பட்டுள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), ஈ.பி.டிபியின் கு.திலீபன் ஆகியோருமே பாராளுமன்ற செயற்பாட்டில் கடைசி இடங்களை பிடித்துள்ளனர். பாராளுமன்ற வரவு, உரையாற்றுவது, விவாதங்களில் கலந்து கொள்வதன் அடிப்படையில் உறுப்பினர்களின் செயற்பாட்டு தரம் தீர்மானிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. பார்க்க: Parliment


மீண்டும் கொரோனா அபாயம்
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் மீண்டும் ஏற்பட்டுள்ள நிலையில் அதனைக் கட்டுப்படுத்த மக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அரசாங்கம் வெள்ளிக்கிழமை கோரியது. நாட்டில் மூன்றாவது கொரோனா அலைக்கு மத்தியில் புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் கொரோனா நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சால் வெளியிடப்பட்டுள்ளன. எதிர்வரும் மே 31 ஆம் திகதி வரை பொதுமக்கள் பின்பற்றவேண் டிய புதிய சுகாதார வழிமுறைகள் குறித்த அறிவிப்பே வெளியிடப்பட்டுள்ளது. புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, அத்தியாவசிய தேவைகள் தவிர ஏனைய செயல்பாடுகளுக்காக வீட்டிலிருந்து வெளியில் செல்வதற்கு இரண்டு பேருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், பஸ், ரயில் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துகளில், ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமையவே பயணிகள் ஏற்றப்படவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கார் மற்றும் ஓட்டோவில் பயணிக்கக் கூடிய ஆட்களின் எண்ணிக்கை இரண்டாகக் குறைக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய வாகனங்களில் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு அமைய பயணிகளை ஏற்றிச்செல்ல முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அரச மற்றும் தனியார் நிறுவனங்களில், தேவைக்கு ஏற்றவாறு பணியாளர்களை சேவையில் ஈடுபடுத்தவும் பல சந்தர்ப்பங்களில் வீடுகளிலிருந்து பணிபுரிவதற்கான செயல்திட்டங்களை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பார்க்க: Revised Guidelines-COVID-19

இலங்கையில் புதிதாக இனங்காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களில் கணிசமான எண்ணிக்கையானவர்கள் இளம் தரப்பினர் எனவும் இவர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானோர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சித்திரைப் புத்தாண்டு விடுமுறைக்காலத்தை அடுத்தே இளம் தரப்பினரிடையே கொரோனா தொற்றுக்கள் அதிகரித்துள்ளதாக ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறை பணிப்பாளர் டொக்டர் சந்திமா ஜீவந்தார தெரிவித்தார். இந்த நிலையில் நாட்டில் கொரோனா தொற்றாளர்களுக்கு சிசிச்சையளிக்கும் மருத்துவமனைகளிலுள்ள அதிதீவிர சிசிச்சைப் பிரிவுகள் பலவும் அவற்றின் கொள்ளளவைத் தாண்டி நிரம்பி வழிவதாகவும் இன்னமும் பல நெருக்கடிக்கட்டத்திலுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனையிறவில் குவியும் பறவைகள்
இலங்கையில் பறவைகளைப் பார்வையிடும் தளங்கள் பிரபலமான சுற்றுலாத் தளங்களாக உள்ளன. அவ்வரிசையில் புதிதாக இணைந்துள்ளது ஆனையிறவு. அங்கு நூற்றுக்கணக்கான பெரும்பூநாரைகள் (புசநயவநச குடயஅiபெழள) வருகின்றன. பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் கண்ணைக் கவரும் வகையிலும் இருக்கின்றன. படங்கள்: Elephant Pass – 1, 2, 3, 4

தெரியப்பட்ட இவ்வார டுவீட்கள்: Weekly Tweet-01, 02

இவ்வாரக் கேலிச் சித்திரங்கள்: Cartoon-1, 2, 3, 4, 5