கடந்து போன காலம்
(தாயகத்தில் சென்றவாரம் நடைபெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பு)
பேர்கன்தமிழ் இணையத்தளத்திற்காக வானவரம்பன் வந்தியத்தேவன்


பற்றியெரிந்த கப்பல்
இலங்கைக் கடற்பரப்பில் அனுமதிக்கப்பட்ட ‘எக்ஸ் – பிரஸ் பேர்ல்’ கப்பல் பழுதானதானதன் விளைவால் இலங்கைக் கடற்பரப்பில் பற்றி எரிந்து பாரிய சேதத்தை இலங்கைக் கடலுக்கு ஏற்படுத்தியுள்ளது. இக்கப்பல் உள்நுழைவதற்கு கட்டார் மற்றும் இந்திய துறைமுகங்கள் அனுமதி மறுத்த நிலையிலேயே இலங்கைக்கு வந்தது எனச் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. மேற்படி இரண்டு நாட்டு துறைமுகங்களிலும் அனுமதி மறுக்கப்பட்ட நிலையிலேயே, கப்பல் இலங்கைக்கு வந்தது எனக் கப்பல் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். கப்பலின் தீ விபத்துக்கு, கொள்கலன்களில் இருந்த இரசாயனப் பொருட்களின் கசிவு காரணமாக அமைந்துள்ளது. கப்பலில் இருந்த இரசாயனப் பொருட்கள் உரிய முறையில் களஞ்சியப்படுத்தப்படாத காரணத்தால், தீப்பரவல் ஏற்பட்டுள்ளது எனவும், ‘எக்ஸ் – பிரஸ் பேர்ல்’ நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டிம் ஹார்ட்னோல் குறிப்பிட்டுள்ளார்.

பல நாட்கள் தீப்பிடித்து எரிந்த நிலையில் தற்போது மூழ்கி வரும் ஆஏ ஓ-Pசநளள Pநயசட கப்பலை இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்த விதம் குறித்து உரிய விசாரணைகளை முன்னெடுக்க உரிய அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சுற்றாடல் நீதி மையம், அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஹேமந்த விதானகே மற்றும் குறிப்பிட்ட சில மீனவர்கள் உள்ளிட்டோர் இணைந்து குறித்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இம்மனுவின் பிரதிவாதிகளாக இலங்கைத் துறைமுக அதிகாரசபை சமுத்திர மாசடைவைத் தடுக்கும் அதிகாரசபை, மத்திய சுற்றாடல் அதிகாரசபை, நாரா நிறுவனம், துறைமுக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர். இலங்கை கடலுக்குள் அண்மையில் நுழைந்த குறித்த கப்பல் தீப்பிடித்து மூழ்கியுள்ளமையானது இலங்கைக்கு பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தியயுள்ளதாக மனுதாரர்கள் தங்கள் மனுவில் சுட்டிக்காட்டுயுள்ளனர். மேலும் இதன் காரணமாக மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாகவும் நாட்டின் பொருளாதாரம், சுற்றுலா, கப்பல் துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர். கொழும்பு துறைமுகத்திலிருந்து சுமார் 9.5 கடல் மைல் தொலைவில் கப்பல் தீப்பிடித்ததோடு பின்னர் அது அணைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆழ் கடலுக்கு இழுத்துச் செல்லும் நடவடிக்கை இடம்பெற்று வந்த நிலையில் அது கடலில் மூழ்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கப்பலுக்குச் சொந்தமான நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி சாமுவேல் யோஸ்கோவிச் இச்சம்பவம் குறித்து இலங்கை மக்களுக்கு தனது வருத்தத்தை தெரிவித்த அவர் அது தொடர்பில் மன்னிப்பு கோருவதாகவும் அறிவித்தார். சிங்கப்பூரின் பிரபல தொலைக்காட்சியான ஊhயnநெட நேறள யுளயை இற்கு அளித்த பேட்டியிலேயே அவர் இதனைத் தெரிவித்திருந்தார். காணொளி: https://www.youtube.com/watch?v=s5vJ0-kKiRM

கப்பலில் இருந்து கடலில் வீழ்ந்த கொள்கலன்களில் இருந்து சிதறிய பிளாஸ்டிக் துணிக்கைகள் எந்தத் திசையில் நகர்ந்துசெல்லும் என மேற்கு அவுஸ்திரேலியாவின் சமுத்திர நிறுவகத்தைச் சேர்ந்த பேராசிரியர்களான சரித பட்டியாராச்சி மற்றும் கலாநிதி சரத் விஜேரத்ன ஆகியோர் எதிர்வுகூறல் அனிமேஷன் ஒன்றைத் தயாரித்துள்ளனர். இதன்படி பிளாஸ்டிக் துணிக்கைகள் இலங்கையின் மேற்கு கடற்பகுதியில் இருந்து வங்களா விரிகுடா வரையில் வியாபிக்கும் என்ற வரைபடத்தில் விளக்கியுள்ளனர்.

கப்பலில் அசிட் கசிவு ஏற்பட்டுள்ளதை அரபிக் கடல் பகுதியிலேயே கப்பல் ஊழியர்கள் அவதானித்திருந்ததாக சர்வதேச கடல்சார் விடயங்கள் குறித்து அறிக்கையிடும் ளுpடயளா 24×7 இணையத்தளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. கட்டாரின் ஹமாட் மற்றும் இந்தியாவின் ஹசீரா துறைமுகங்களில் இரசாயன கொள்கலன்களை இறக்குவதற்கு கப்பலின் கப்டன் அனுமதி கோரியுள்ளார். எனினும் கப்டனின் இந்த கோரிக்கையை குறித்த இரண்டு துறைமுகங்களின் நிர்வாகங்களும் நிராகரித்ததாகவும் இணையத்தள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொள்கலன்களில் உரிய முறையில் பொருட்களை களஞ்சியப்படுத்தாமையால் அசிட் கசிவு ஏற்பட்டுள்ளதாக குறித்த கப்பல் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்தச் சேதம் ஏற்படுத்திய தாக்கத்தை காட்டும் படங்கள்: Ship Disaster 01, 02, 03, 04, 05

அரசுக்கு எதிராகப் பேராயர் போர்க்கொடி!
இலங்கையைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்ட வந்த குழுவினர், நாட்டை அழிவுப் பாதைக்குக் கொண்டு செல்கின்றனர் என்று கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் இன்று குற்றஞ்சாட்டினார். இலங்கை எதை நோக்கிப் பயணிக்கின்றது, யார் நாட்டை ஆட்சி செய்கின்றனர், யாரால் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்பன சிக்கல் மிக்கதாக மாறியுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார். நாட்டின் வளங்கள் அனைத்தையும் விற்பனை செய்வது அபிவிருத்தியல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டினார். அவர் மேலும் தெரிவித்ததாவது: “நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்வதைத் தயவுசெய்து நிறுத்திக்கொள்ளுமாறு அரசிடம் கேட்டுக்கொள்கின்றேன். நாட்டு வளங்களை விற்பனை செய்வது இலகுவான விடயமாக இருக்கும். எனினும், இந்த நாட்டுக்கென்று ஒரு கௌரவம் இருக்கின்றது. நாட்டின் கௌரவத்தைப் பாதுகாப்பது அனைத்து அரசியல் தரப்பினரினதும் பொறுப்பாகும். எம்.சி.சி. ஒப்பந்தத்துக்கு நாம் எதிர்ப்புத் தெரிவித்தபோது, அதற்கு தற்போதைய அரசில் உள்ளவர்கள் ஆதரவு தெரிவித்தார்கள். ஆனால், இன்று, எம்.சி.சியைவிட அபாயமான ஒன்றை இந்த அரசு மேற்கொண்டு வருகின்றது. மக்கள் எதிர்பார்த்த மாற்றங்கள் அனைத்தும் வீணாகிப் போயுள்ளது” என்றார். காணொளி: https://www.youtube.com/watch?v=1WlVtDt7MZM


ஜூன் 14 வரை நீடிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடு
தற்போது நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் ஜூன் 14ஆம் திகதி, திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார். கொவிட்-19 3ஆம் அலையின் உச்சத்தை தொடர்ந்துஇ கடந்த மே மாதம் 25ஆம் திகதி நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்ட பயணக்கட்டுப்பாடு மே 31ஆம் திகதி தளர்த்ப்படுமென அறிவிக்கப்பட்ட போதிலும் அது தொடர்ச்சியாக ஜூன் 07ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது ஜூன் 14ஆம் திகதி வரை நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய மே 25 இரவு 11.00 மணி முதல் நாடு முழுவதும் தொடர்ச்சியாக 19 நாட்களுக்கு இப்பயணக் கட்டுப்பாடு தொடரவுள்ளது. இதேவேளை பயணக்கட்டுப்பாடு தொடர்பில் கடந்த மே 11ஆம் திகதி முதல் மே 31ஆம் திகதி வரை பொலிஸாரின் விடுமுறைகள் இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் குறித்த உத்தரவு எதிர்வரும் ஜூன் 15ஆம் திகதி நீடிக்கப்படுவதாக நேற்று (01) அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

“கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு இரு வார காலம் முடக்கப்பட்டாலும் கூட நாட்டின் நிலைமைகள் மோசமானதாகவே உள்ளது. மக்களின் நடமாட்டத்துக்கு அனுமதித்தால் மீண்டும் கொத்தணிகள் உருவாகும் அச்சுறுத்தல் உள்ளது.” – இவ்வாறு சுகாதார, வைத்திய நிபுணர்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாடளாவிய ரீதியில் 25 மாவட்டங்களிலும் அவசர சிகிச்சைப் பிரிவுகளை அமைக்கவும் அரசிடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வாராந்த கொரோனா ஆய்வு கூட்டங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில், இறுதியாக நடைபெற்ற கூட்டத்தில் நாட்டின் மோசமான கொரோனா வைரஸ் பரவல் குறித்த ஆய்வொன்றை அரசிடம் சுகாதாரத் தரப்பினர் முன்வைத்துள்ளனர்.

அதற்கமைய நாடு தற்போது முடக்கப்பட்டுள்ள போதிலும் நாட்டில் வைரஸ் பரவல் குறைந்துள்ளதாகக் கருத முடியாது. எனவே, மக்களின் நடமாட்டம், அநாவசிய செயற்பாடுகள் காரணமாக மீண்டும் நாட்டில் கொரோனா கொத்தணிகள் உருவாக அதிக வாய்ப்புகள் உள்ளன என்று அரசுக்குச் சுகாதாரத் தரப்பினர் எடுத்துரைத்துள்ளனர். நாட்டைத் தொடர்ச்சியாக முடக்குவது அல்லது சகலருக்கும் தடுப்பூசிகளை ஏற்றுவது ஆகிய இரண்டு செயற்பாடுகளில் ஒன்றைக் கையாள வேண்டும் என்பதையும் அவர்கள் எடுத்துக் கூறியுள்ளனர். அயல் நாடான இந்தியாவை எடுத்துக் கொண்டால் தொடர்ச்சியாக மூன்று மாதங்களுக்கு மேலாக நாடு முழுமையாக முடக்கப்பட்டது. அதன் பின்னர் மீண்டும் நாடு திறக்கப்பட்ட பின்னர் இன்று உலகிலேயே அதிக கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ள நாடாக இந்தியா மாறியுள்ளது. எனவே, நாட்டை முடக்குவதால் மாத்திரம் கொரோனா வைரஸ் பரவலில் இருந்து தப்பிக்க முடியாது என்ற காரணிகளையும் அரசிடம் சுகாதாரத் தரப்பினர் எடுத்துக் கூறியுள்ளனர். இந்நிலையில், நாட்டில் சகல மாவட்டங்களிலும் அவசர சிகிச்சை பிரிவுகளை உருவாக்க வேண்டும். ஒரு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட ஒரு வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவை உருவாக்கிக் கொரோனாத் தொற்று நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் வேலைத்திட்டமொன்றை உருவாக்க வேண்டும் என்று பொதுப் சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் வைத்தியர் உபுல் ரோஹண எடுத்துக் கூறியுள்ளார்.

மேலும், தற்போதுள்ள நிலை தொடருமாயின் அடுத்த மாத நடுப்பகுதியில் அல்லது இறுதியில் நாளொன்றுக்கான தொற்றாளர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தாண்டலாம். எனவே, இப்போதே சிகிச்சை நடவடிக்கைகளை முன்னெடுப்பது நாடட்டைப் பாதுகாக்க ஏதுவாக அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து கவனம் செலுத்துவதாகவும், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நாட்டில் 25 மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்ட ஒரு வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவை உருவாக்கி பொதுமக்களுக்கான சிகிச்சைகளை வழங்கும் சகல வசதிகளையும் ஏற்படுத்தி கொடுப்பதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி சுகாதார, வைத்திய நிபுணர்களிடம் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் கீழ் தரமான அரசியலால் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகளும் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் இலங்கையில் தற்போது தடுப்பூசி அரசியலே காணப்படுகிறது என்று மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கத்தை கடுமையாகச் சாடியுள்ளது. ஜே.வி.பி. தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஜே.வி.பி. தலைவர் அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகளுக்காக உலக சுகாதார ஸ்தாபனத்தினால் ஆலோசனை வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன. வேலைத்திட்ட திட்டமிடல்களும் காணப்பட்டன. அந்த வேலைத்திட்டங்களுக்கு அமையவே தடுப்பூசி வழங்கப்படவேண்டும். உலகின் பல நாடுகள் உலக சுகாதார ஸ்தாபனத்தின் வேலைத்திட்டங்களையே ஏற்றுக் கொண்டுள்ளன. இவற்றை இலங்கையும் ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால் அரசாங்கத்தின் கீழ் தரமான அரசியலால் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகளும் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசி என்பது நாட்டு மக்களின் உரிமையாகும். ஆனால் தற்போது அவற்றை உரிய நேரத்தில் பெற்றுக் கொடுக்க தவறியமை தொடர்பில் அரசாங்கத்தின் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தின் ஊடாக அரசாங்கத்தின் இயலாமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.


இலங்கை மீது நடவடிக்கை வேண்டாம்
அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் முன்வைக்கப்பட்ட இலங்கை குறித்த தீர்மானம் மீது எந்தவிதமான செயற்பாடுகளையும் முன்னெடுக்கவேண்டாம் என அமெரிக்க வெளி விவகாரக் குழுவிடம் இலங்கை அவசரக் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது. வாஷிங்டனிலுள்ள அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் ரவிநாத ஆரியசிங்க மூலம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருப்பதாக கொழும்பில் வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் நேற்றுத் தெரிவித்தன. அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில் கடந்த 18 ஆம் திகதி இலங்கை குறித்த கடுமையான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு இரண்டு தினங்களுக்கு முன்னர் தமது கடுமையான ஆட்சேபனையைத் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் ரவிநாத ஆரியசிங்க மூலமாக தற்போது மற்றொரு அவசர கோரிக்கை இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. “பிரதிநிதிகள் சபையில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்தின் உள்ளடக்கத்தில் இலங்கை மீது தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தவறானவை, பக்கசார்பானவை, ஆதாரமற்றவை” எனத் தெரிவித்துள்ள இலங்கை அரசாங்கம், “இந்தத் தீர்மானம் என்ன நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டது” என்பதையிட்டு பாரிய சந்தேகம் எழுந்திருப்பதாகவும் இலங்கை தெரிவித்திருக்கின்றது. தூதுவர் ரவிநாத ஆரியசிங்க மூலமாக அனுப்பிவைக்கப்பட்டுள்ள ஆவணத்தில், குறிப்பிட்ட தீர்மானம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. அதில் மேலும் முக்கியமாகத் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: “பாரம்பரிய தமிழர் தாயகம்” எனத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதன் மூலம், பிரிவினைவாதம் ஊக்குவிக்கப்படுவதுடன், இலங்கையின் இறைமையும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. இது சரித்திர உண்மைகளைத் திரிவுபடுத்துவதாகவும், தற்கால யதார்த்தங்களுக்கு முரணானதாகவும் அமைந்திருக்கின்றது. இது இலங்கையைச் சிதைவுபடுத்துவதற் கும் விடுதலைப் புலிகளும், அவர்களுடைய ஆதரவாளர்களும் தமது இலக்குகளை அடைவதற்கு ஆதரவாகவே உள்ளது. சர்வதேச பொறிமுறை அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தற்போதைய தருணத்தில் ஒரு சூழ்ச்சிகரமானதாகும். ஏனெனில் அரசாங்கம் கடந்த ஜனவரியில் நம்பகத்தன்மையானதும், வெளிப்படையானதுமான ஜனாதிபதி விசாரணைக்குழு ஒன்றை அமைத்துள்ளது. 2021 மார்ச் 4 ஆம் திகதி இந்த விசாரணைக்குழுவுக்கு யாரும் எழுத்துமூலமாகவோ அல்லது வேறுவடிவத்திலோ தமது கருத்துக்குளை சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. ஏப்ரல் மாதத்திலிருந்து இந்தக் குழு விசாரணைகளை முன்னெடுக்கின்றது.” இவ்வாறு இந்த ஆவணத்தில் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

சீரற்ற காலநிலையால் அதிகரிக்கும் மரணங்கள்
இலங்கையில் தொடர்ந்து நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக ஐவர் பலியான நிலையில் 07 மாவட்டங்களில் 170,022 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 05 ஆக அதிகரித்துள்ளது. கேகாலை மாவட்டத்தில் மாவனெல்லை தெவனகலகந்த மற்றும் வரக்காபொல அல்கமகந்த என்ற இடங்களில் நேற்று இடம்பெற்ற மண் சரிவு காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த அனர்த்தத்தில் மேலும் 03 பேர் காணாமல் போயிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீட்புப் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். இரத்தினபுரி அயகம பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவில் ஒரு மாணவி உயிரிழந்துள்ளார். மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளார். புத்தளம் மாதம்பை பிரதேசத்திலும் ஹொரண பிரதேசத்திலும் குளிக்கச் சென்ற 2 பேர் நேற்றுமுன் தினம் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். புத்தளம் மகாவெவ குளத்திற்கு நீராடச் சென்ற ஒருவர் காணாமல் போயுள்ளார். இதற்கமைய இதுவரை 7 பேர் காணாமல் போயுள்ளதாகவும், இருவர் காயமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கம்பகா நகரம் உள்ளிட்ட சுற்றுப்புறங்களில் பல வீடுகள் மீண்டும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் மக்கள் அசௌகரியங்களை எதிர் கொண்டுள்ளனர். சில இடங்கள் 5 அடி உயரத்தில் நீரில் மூழ்கி உள்ளன. நீர் வழிந்தோடும் பகுதி அடைப்பட்டுள்ளமையே இதற்கான பிரதான காரணமாகும். அத்தனகல்ல ஓயாவும் ஊறுகல் ஓயாவினாலும் வெள்ள அனர்த்தநிலை ஏற்பட்டுள்ளது. இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்தில் கட்டடம் ஒன்று ஒன்றின் மீது மண் திட்டு இடிந்து விழுந்து இருப்பதால் பல வகுப்பறைகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது புத்தளம் மாவட்டத்தில் அனைத்து நீர்நிலைகளும் வழிந்து ஓடுவதால் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்தவார நாளிதழ்களில் இருந்து:
இலங்கையின் தோல்விக்கான காரணம் Political leadership

சரியான அரசியல் தலைமைகளைத் தேடும் ஞானத்தங்கங்கங்கள் SL failure


தெரியப்பட்ட இவ்வார டுவீட்கள்: Weekly Tweet-01, 02, 03, 04

இவ்வாரக் கேலிச் சித்திரங்கள்: Cartoon-1, 2, 3, 4, 5, 6, 7