அருட்தந்தை இருதயநாதன் பேதுருப்பிள்ளை அவர்கள் இறைவனடி சேர்ந்து விட்டார்.

அருட்தந்தை இருதயநாதன் பேதுருப்பிள்ளை அவர்கள் 1947 மே மாதம் யாழ்ப்பாணம் தாளையடியில் பிறந்து, 27.12.1974 இல் யாழ் ஆயரினால் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். 1975, 1976 ஆம் ஆண்டுக்காலப்பகுதிகளில் யாழ் புனித மரியாள் பேராலயத்தில் பணிபுரிந்தார். அதேவேளை யாழ் சிறைச்சாலையிலும் குருவாகப் பணி புரிந்தார்.


1979இல் Sri-Lanka Palayaddu இல் உள்ள புனித லூர்து அன்னை ஆலயத்தில் பணி பரிந்தார். பின்னர் philiphins Manila இல் உள்ள கிழக்காசிய ஆயரில்லத்தில் இரண்டு ஆண்டுகள் கல்வியினைத் தொடர்ந்தார். அதே வேளை Metro Manila இன் காலூக்கன் நகரில் உள்ள Our Lady of Grace ஆலயத்தில் உதவிக்குருவாக பணிபுரிந்தார்.

01.04.1987 ஆம் திகதி அருட்தந்தை அவர்கள் Bergen நகருக்கு வருகை தந்து, புனித பவுல் பங்கில் தனது பணியினை ஆரம்பித்தார். அவர் நோர்வேஜிய மொழியை திறம்படக் கற்று இங்கு வாழ்ந்த அனைத்து மொழியினருக்கும் தனது பணியை ஆற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் சமயம் கடந்து அனைத்து தமிழர்களுடனும் நல்லுறவு கொண்டதுடன், அவர்களுடன் நட்பினை வளர்த்து தமிழர்களின் கலாசார விடயங்களிலும் தன்னை ஈடுபடுத்தினார். பல ஆண்டுகளாக Bergen தமிழ்ச் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்று சங்கத்தை வழி நடத்தினார்.

இங்கு வாழ்ந்து வந்த மூத்த தமிழர்களுடன் சிறந்த நட்புறவை கொண்டிருந்தார். புனித பவுல் பாடசாலையிலும் ஆசிரியராக பணியாற்றினார். 1994—1995 புனித பவுல் ஆலய பங்குத்தந்தையாகப் பணியாற்றினார்.

1995 —-1996 ஜெருசலேம், ரொறனரோ போன்ற இடங்களுக்கு மேற்படிப்பிற்காக சென்றிருந்தார். பின்னர் Oslo வருகை தந்து புனித Olav ஆலயத்தில் 2006 ஆம் ஆண்டு வரை பணி புரிந்தார்.

2001ல் Oslo இல் உள்ள புனித Synniva பாடசாலையிலும் ஆசிரியராக பணியாற்றினார். 2006 இல் Lillestrøm புனித Magnus பணியகத்தில் ஆயரின் மேய்ப்புப் பணிக்குழு உறுப்பினரானார். 2007 ஆம் ஆண்டில் Oslo கத்தோலிக்க மறை மாவட்டத்தில் பணியாற்றினார். அக்காலகட்டத்தில் அவர் நோர்வே மறை மாவட்ட குருவானார்.

பின்னர் புனித Magnus ஆலய பங்குத் தந்தையாக பணியாற்றி மீண்டும் தனது தாய் மண்ணாம் தாளையடிக்கு குடியேறினார். அங்கு அவரது உடல் நலக் குறைவு காரணமாக மீண்டும் நோர்வே நாடு திரும்பினார்.

அருட்தந்தை அவர்கள் 2020 மே மாதம் 30 ஆம் திகதி பூவுலகில் தன் பணி வாழ்வை முடித்து இறைவனடி சேர்ந்தார். அவரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.

தேன் தமிழ் ஓசை