என்றும் எமது அன்புக்குரிய,பேர்கன் வாழ் தமிழ் உறவுகளே,

மீண்டும் ஓர் செய்தி ஊடாக அனைவரையும் தொடர்பு கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம்.  இன்று  நாம் வாழும் நாட்டில் அமுல் படுத்தப்பட்டிருக்கும் «கொரோணா>>நோய்த்தடுப்பு சட்ட விதிகளுக்கு அமைய வருடா வருடம் BERGEN தமிழர் சங்கத்தால் ஒழுங்கு செய்து நடாத்தப்படும் "ஒளிவிழா" இவ் வருடம் நடைபெறமாட்டாது என்பதை மிகவும் கவலையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஒளி விழா அன்று உங்களால் வழங்கப்படும் அனைத்து அன்பளிப்புகளும்(நுளைவு கட்டணம்,விசேடமான நிதி அன்பளிப்புகள்,உணவு விற்பனவு)மூலம் பெறப்படும் அனைத்து நிதிகளும் எமது தாயக உறவுகளின் தேவைகளுக்கு உதவி வந்துள்ளோம். 

இம்முறையும் உதவித்தேவைகள் அதிகமாக இருப்பதால் உங்களின் பங்களிப்புகளை எதிர்பார்த்து நிற்க்கின்றோம். 2020 ஆண்டுக்கான அங்கத்தவர் பணத்தையும்(100குரோணர்)வழங்கி உதவுமாறும் தாழ்மையுடன் வேண்டிநிற்கின்றோம்.   Bank.konto.nr 36258283117. Vipps 93893538 நன்றியுடன், 

விக்ரர் எதிர்வீரசிங்கம்.  பேர்கன்,தமிழர் சங்கம்.நோர்வே.