கோவிட் -19 சோதனை - யாருக்கு முன்னுரிமை?

காய்ச்சல், இருமல் அல்லது மூச்சுத்திணறல் ஆகியவற்றுடன் கடுமையான சுவாசத்தொற்று ஏற்பட்டால், பயணவரலாற்றைப் பொருட்படுத்தாமல், கோவிட்-19 இற்குறிய சோதனை செய்துகொள்ள வேண்டும்.
மேலும்: * கோவிட்-19 அறிகுறி உள்ளவர்களைச் சோதனைக்கு உட்படுத்தி தேவையேற்படின் நோயாளிகளை வைத்தியசாலையில் சேர்த்துக்கொள்ளவும் வேண்டும்.
* கோவிட்-19 நோயாளிகள் / சுகாதார நிறுவனங்களில் வசிப்பவர்கள்.
* கோவிட்-19 நோயாளி தொடர்பான வேலைகளுடன் சுகாதார சேவையிலுள்ள பணியாளர்கள். * 65 வயதிற்கு மேற்பட்ட நபர்கள், நாள்பட்ட நோயைக் கொண்டுள்ளவர்கள் . * கோவிட்-19 இன் உறுதிப்படுத்தப்பட்ட நபரோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள்.

* கோவிட்-19 சம்பந்மான நோயாளி / நோய் தொடர்பான வேலையில் உள்ளவர்கள். * 2 நாட்களுக்குமேல் நீடித்த, வேறு எந்த காரணமும் இல்லாமல் லேசான / கடுமையான சுவாச அறிகுறிச் சோதனைக்கு உட்பட்டவர்கள்கூட மேலதிக சோதனைக்கு உட்படுத்தப்படலாம்.
* இருதய நோய், நீரிழிவு நோய், நாள்பட்ட நுரையீரல் நோய், புற்றுநோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நீண்டகால நோய்க்கு ஆட்பட்டவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படலாம்.

நோய் அறிகுறிகள் தீவிரமாக இல்லாவிட்டால், கீழ்வருவோருக்கு கோவிட்-19 சோதனை அளிப்பதில் அவசரம் தேவையில்லை:
- லேசான சுவாசக்குழாய் தொற்று உள்ளவர்ககள் - மற்றவர்களுக்கு பயணத்திற்குப்பின் பொதுவாக சோதனைகள் வழங்கப்படுவதில்லை.
• நோய் அறிகுறிகளுக்கான சிகிச்சைக்குப்பின் அவர்கள் வீட்டில் ஒரு நாள் இருக்க வேண்டும்.
- அறிகுறிகள் இல்லாதவர்கள் கோவிட்-19 சோதனைக்கு உட்படுத்தப்படக்கூடாது.