அறிவித்தல்

 

தமிழீழத்தேசிய மாவீரர்நாள் 2020 பேர்கன் நேரடி ஒளிபரப்பு.

கார்த்திகை 27 மாலை 5.30 மணிக்கு நேரடி ஒளிபரப்பு ஆரம்பமாகும், தொடர்ந்து மாலை 6 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாகும்.

 

இனமானம் காக்க தம்முயிரை ஈகம் செய்த வீர மறவர்கள்!
ஈழக்கனவுடன் வீரச்சமராடிய வேங்கைகள்!
ஒரு கணம் எம் மனத்திருத்தி வணங்குவோம்.
உணர்வுகளால் உறுதி எடுத்துக்கொள்வோம்.

 

தேன் தமிழோசை நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்!

வானொலி, இணையம் ஊடாக சிறுவர் இளையோரின் பாடல்கள்.
 
இவ்வருடம் நத்தார் விழாவினை கொண்டாடும் முகமாக நமது சிறுவர், இளையோரின் நத்தார் பாடல்கள் சிறந்த இசையோடு ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு செய்து Radio Tamil (தேன் தமிழ் ஓசை), Bergentamil.com இணையதளம், மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக ஒலி , ஒளிபரப்பு செய்ய தீர்மானித்துள்ளோம்.

 

என்றும் எமது அன்புக்குரிய,பேர்கன் வாழ் தமிழ் உறவுகளே,

மீண்டும் ஓர் செய்தி ஊடாக அனைவரையும் தொடர்பு கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம்.  இன்று  நாம் வாழும் நாட்டில் அமுல் படுத்தப்பட்டிருக்கும் «கொரோணா>>நோய்த்தடுப்பு சட்ட விதிகளுக்கு அமைய வருடா வருடம் BERGEN தமிழர் சங்கத்தால் ஒழுங்கு செய்து நடாத்தப்படும் "ஒளிவிழா" இவ் வருடம் நடைபெறமாட்டாது என்பதை மிகவும் கவலையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

 
 நோர்வே விஜேந்திரன் எழுதிய 'மெளன அலைகள்' நில, புல உளவியற் பிரச்சனைகள் பற்றிய நூலின் வெளியீட்டு விழா.
 

தமிழில் கொரோனா பற்றி பாப்பிலோனின் தகவல் இங்கே:
முகமூடிகளைப் பயன்படுத்துவது பற்றிய தகவல் இங்கே

 

கோறோனா அறிவுறுத்தலும்  வழிமுறையும் 

தமிழ் சங்கம் பேர்கன் நோர்வே

தாளையடியில் பிறந்து
அருட்பணிக்காய் அர்ப்பணித்து
அகமகிழ்ந்து நின்றவரே,
ஆன்மீகப் பணி புரிய நோர்வே பேர்கன் மண்
நாடி வந்த அருட்பணியாளரே,
பேர்கன் தமிழ் சங்கத்தின் தலைமை ஏற்று
எம் சங்கத்தின் சிறந்த பொறுப்பாளராய்
பல ஆண்டுகள் பணி புரிந்த
முன்னாள் தலைவரே,
தாய் மண்ணில் உறவிழந்து
பரிதவித்து நின்ற பாலகர்களை
அரவணைத்து கல்விப்பசி தீர்த்த பாசத்தந்தையே
ஆன்மீக, தத்துவ சிந்தனைகளை
முழங்கிய தங்கக்குரலோனே
இன்று நீங்கள் மௌனித்துக் கொண்ட
செய்தி கேட்டு தவித்து நிற்கின்றோம்

தமிழ் தாயின் பாசப் புதல்வனானே
இயேசு பிரானின் கருணை உள்ளமே
வானுலக தேவன் வாவென்று அழைத்தால்
எம்மால்தான் என்ன செய்ய முடியும்.
அழைத்த தேவன் தமதருகில் உமை அமர்த்தி
ஆறுதலைத் தந்தருள மனமுருகி மன்றாடி
இறைபரனை வேண்டுகின்றோம்.

பிரிவால் துயருறும்
பேர்கன் வாழ் மக்கள் சார்பில்
தமிழ் சங்கம் பேர்கன் நோர்வே

Hei, Jeg heter Esperanza og jeg er medlem i Inncovid, et prosjekt som ble startet av Universitet i Bergen for å utforske innvandrernes tilgang til informasjon om Covid-19. På nettsiden Inncovid.no kan man få informasjon på fem ulike språk (arabisk, polsk, somalisk, spansk og tamilsk) og svare på et spørreskjema som vil hjelpe til å forbedre norske helsetjenester i fremtiden. Kan du svare på spørreundersøkelsen, sende den til så mange tamilere du kan og be dem om å gjøre det samme? Spørreundersøkelsen kan bli funnet på nettsiden eller ved hjelp av lenken til den tamilske versjonen:

Tamilsk, Innvandrere i Norge under koronavirusepidemien (COVID-19)

 

இக்கட்டான கொரோணா சூழ்நிலை காரணமாக இவ்வருடம் எல்லோரும் எங்கள் வீடுகளில் இருந்தே ஒரு தீபம் ஏற்றி முள்ளிவாய்க்கால் பேரழிப்பை நினைவு கூருவோம். மே 18. திங்கட்கிழமை பி.ப 18 மணிக்கு ஒஸ்லோவில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள நினைவுகூரலில் நாமும் இணையத்தள வாயிலாக கலந்துகொள்ளலாம்.

 

எமது அன்பான தமிழ் மக்களே,
உதவும் கரங்கள் அமைப்பானது கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக நோர்வேயின் சுதந்திர தின நாளன்று பேர்கன் நகரின் மைய்யப்பகுதியில் உணவகம் ஒன்றினை அமைத்து சுவையான பல்வகை உணவுகளை விற்று அதிலே கிடைக்கும் வருமானம் மூலம் நமது தாயகத்தில் அல்லலுறும் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றோம்.

Kalender

No events

Tamilunicode

தாயக செய்திகள்

தேன் தமிழிதழ்

Blodtrykk & Diabetes

Covid-19

Template by JoomlaShine