உலகிலே பல குரல்கள். அதிகமான குரல்கள் அடக்குமுறையினதும், ஆடம்பரத்தினதும், ஆதிக்கத்தினதுமான குரல்களே. இந்த உலகிலே ஆதியிலிருந்து இன்று வரை, முக்கியமாக புதிய ஏற்பாட்டு காலத்திலிருந்து அகத்திலும் புறத்திலும் ஓங்கியொலிக்கும் குரல், இம் மீட்பின் குரல் ஆம், அதுவே நம் ஆண்டவரின் குரல். அந்த குரல் மட்டுமே உண்மையான குரல்.
இந்த குரலை மையமாக கொண்டு அன்பியக் காவியமாம், பாஸ்கா மறைபொருளை பாடுகளின் காட்சியாக, இந்த செயற்கை நுன்னறிவு காலத்திலும் நம் மக்கள் கலை நயத்தோடு வெளிக்கொனர்வது பாராட்டப்பட வேண்டியது. இதனை பல தியாகங்களோடு முன்னெடுக்கும் போர்கன் நிர்த்திய அபிநய கலைக் குழுவிற்க்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் செபங்களும். உங்களுடயை இந்த ஆற்றுகை, பகைமயையும், மேலாதிக்கத்தையும், வெறுப்பையும் விதைக்கும் இவ்வுலகிற்க்கு, சரியான மார்க்கத்தை வழங்கட்டும். உங்கள் கலைப்பணியும் அதனால் மறைப்பணியும் வளரட்டும்.
எதிர்காலத்தில் இன்னும் பல கலையூடான நற்செய்தி பணி அதிகரிக்க வாழ்த்துக்கள். (பிலிப்பியர் 3:10).
அருட் தந்தை மிக்கேல் ஜெகன்குமார் கூஞ்ஞ அமதி OMI. Rev Fr. Michael Jegan Kumar Coonghe OMI.
———————————————————————
2025-ஆம் யூபிலி ஆண்டை சிறப்பிக்கும் விதமாக நோர்வே நிர்த்திய அபிநயா கலைக்கூடத்தின் ஒழுங்கமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ள வஞ்சத்தின் மௌன ஓலம் எனும் இறைமகன் இயேசுவை வஞ்சிக்க துடிக்கும் மனித நெஞ்சத்தின் கொடூரத்தை சித்தரிக்கும் இக்காட்சி காணொளியாக வெளியிடுவதற்கு என் இறை வேண்டுதலோடு கூடிய ஆசிகளை வழங்குவதோடு இதை அழகுற அர்த்தமுள்ள முறையில் வடிவமைத்திருக்கும் நிர்த்திய அபிநயா கலைகூட்டத்திற்கும் கலைஞர் குழாமுக்கு என் இறை ஆசியுடன் கூடிய வாழ்த்துக்களையும் தெரிவித்து நிற்கிறேன்
-அருள் பணி அருளப்பு ரஜனிகாந்த். Rev Fr. Arulappu Rajinikanth