4.3 C
Norway
Friday, November 22, 2024

ஏலத்தில் நாசாவுக்கு சொந்தமான நிலவின் தூசி, கரப்பான்பூச்சிகள்! எவ்வளவு தெரியுமா?

நாசா, கடந்த 1969 ஆம் ஆண்டு அப்பல்லோ 11 விண்கலம் மூலம் நிலவுக்கு சென்று ஆய்வு செய்தது.

அந்த ஆய்வின் போது நிலவின் மேற்பரப்பில் இருந்த 47 பவுண்டுகள் (21.3 கிலோகிராம்) சந்திர பாறைகள் மீண்டும் பூமிக்கு கொண்டு வரப்பட்டது.

அதன்போது நிலவின் பாறைத்துகள்கள் பூமியில் வாழும் உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்குமா என்பதை கண்டறிய நாசா ஆய்வில் ஈடுபட்டது.

இதற்காக நிலவின் மேற்பரப்பில் இருந்த துகள்கள் கரப்பான் பூச்சி மற்றும் மீனுக்கு உணவாக அளிக்கப்பட்டது. பின்னர் கரப்பான் பூச்சிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

ஆனால், கரப்பான்பூச்சிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால், நிலவின் துகள்கள் நச்சுத்தன்மை வாய்ந்தது அல்லது பூச்சிகளில் வேறு ஏதேனும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியது என்பதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், நாசாவுக்கு சொந்தமான சுமார் 40 மில்லிகிராம் நிலவு தூசி மற்றும் மூன்று இறந்த கரப்பான் பூச்சிகள் கொண்ட ஒரு குப்பியை உள்ளடக்கிய சோதனையின் பொருள் தற்போது ஏலத்திற்கு வந்துள்ளது.

இது குறைந்தபட்சம் 400,000 அமெரிக்க டாலர்கள் (கிட்டத்தட்ட ரூ. 3 கோடி)க்கு விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த ஏல விற்பனையை நாசா தடுத்தது.

நாசா வழக்கறிஞர் ஒருவர் ஏலத்திற்கு அனுப்பிய கடிதத்தில், இவை இன்னும் மைய அரசுக்கு சொந்தமானது என்று கூறினார்.

ஏலம் விடக்கூடிய நிலவு தூசி மற்றும் மூன்று இறந்த கரப்பான் பூச்சிகள் அடங்கிய குப்பி நாசாவைச் சேர்ந்தது என்றும், இந்த பொருட்கள் ஆய்வுக்கு உட்படுத்திய பிறகு, இதனை விற்பனைக்கோ, தனிநபர் வைத்திருக்கவோ, அல்லது பல்கலைக்கழகம் மற்றும் நிறுவனங்கள் காட்சிக்காகவோ வைத்திருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. என்று கடிதம் வாயிலாக நாசாவின் கூறியது.

இதனால், இந்த பொருட்களை ஏலம் விடுவதை உடனடியாக நிறுத்துங்கள் என்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா கூறியுள்ளது.

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்