2.2 C
Norway
Sunday, May 11, 2025

கனடாவில் கண்டுபிடிக்கப்பட்ட 2000 ஆண்டு பழமையான இராட்சத மரம்

கனடாவின் வான்கூவார் பகுதியில் சுமார் ஆயிரம் முதல் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இராட்சத மரமொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

லியன் ஹெட்வோர்ட்டர்ஸ் பிராந்திய பூங்காவில் இந்த இந்த மரம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மிகப் பெரிய மரங்களில் இதுவும் ஒன்று என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த மரத்தின் விட்டம் 4.8 முதல் 5.8 மீற்றர் வரையிலானது என தெரிவிக்கப்படுகின்றது. போயிங் 747 ரக விமானமொன்றை உள்ளே புகுத்தக்கூடிய அளவிற்கு இந்த மரம் விசாலமானது என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மரத்தின் அளவு பற்றி பல கருத்துக்கள் வெளியிடப்பட்டாலும் இதன் பழமை தன்மை மிகவும் அதிகமானது என்பது மாற்றுக் கருத்துக் கிடையாது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தேவதாரு(red cedars) ரக மரமொன்றே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்