கொரோனா, தொற்றிலிருந்து மீண்டவர்கள் ஏராளமான பல்வேறு பக்க விளைவுகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவில், தற்போது கொரோனாவின் வேரியன்ட் ஓமிக்ரான், டெல்ட்டா வைகை கொரோனா மாறி மாறி தாக்கி வரும் நிலையில், அதன் அறிகுறைகளை வைத்து வேறுபாடு கண்டறியப்படுகிறது.
டெல்டா வகை கொரோனாவை விட, ஓமிக்ரான் மாறுபாட்டில் இறப்பு எண்ணிக்கை குறைவு எனினும், பொதுமக்கள் அலட்சியம் காட்ட, வேண்டாம் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபரின் நோய் எதிர்ப்புச் சக்தி மிகவும் பலவீனமாக இருக்கும். ஆகையால், நோயாளி முழுமையாக குணமடைய அதிக நாட்கள் எடுக்கும். கொரோனாவில் (Coronavirus) இருந்து மீண்டு வரும் நேரத்தில், பலவீனம் அதிகமாக இருக்கும்.
இது, உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல பிரச்சனைகளைத் தரும் நோயாக இது மாறியுள்ளது. எனவே, இந்த தொற்றுநோயிலிருந்து உங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். கொரோனாவைத் தடுப்பதிலும், பாதிக்கப்பட்ட நபரை மீட்பதிலும் உணவுமுறை முக்கியப் பங்கு வகிக்கிறது.